கிறிஸ்துவை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்கள்
*கிறிஸ்துவை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்கள்* இந்தியாவுக்கு கிறிஸ்தவம் வந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டன. தன் சீடர்களிடம் கிறிஸ்து கட்டளையிட்ட நற்செய்தி அறிவிப்பு பணியின்மூலம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அனுதினமும் வளர்ந்துகொண்டிருப்பதுதான் நிதர்சனமான உண்மை. கிறிஸ்தவர் செய்வதுபோல இஸ்லாமியர்கள் அவர்களுடைய மதத்தை இந்தியாவில் பரப்பினாலும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் அன்பின் நற்செய்தி ஊழியத்தை இறை வழிகாட்டுதலோடு, தீர்க்கதரிசன வெளிப்பாடுகளோடு, அறப்பணிகளோடு, தியாக சிந்தையோடு, அற்புத விடுதலை ஊழியங்களை அற்பணித்து செய்வதுபோல அவர்கள் செய்யவில்லை. கிறிஸ்தவ ஊழியர்கள் சந்து பொந்தெல்லாம் நுழைந்து அவமானங்கள், துன்பங்களை அனுபவித்து மக்களை அக்கரையாக ஆதாயம் செய்வதுபோல இஸ்லாமியர்கள் இந்தியாவில் முனைப்போடு செயலாற்றவில்லை. ஆனால், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்தவர்களுடைய எண்ணிக்கை இந்தியாவில் 2.3 விழுக்காடு என்றும், கிறிஸ்தவம் வந்து 650 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள் 19 விழுக்காடு என்றும் அரசு மக்கள் தொகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால், கிறிஸ்தவர் நிஜமாகவே 2.3 விழுக...