கிறிஸ்துவை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்கள்
*கிறிஸ்துவை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்கள்*
இந்தியாவுக்கு கிறிஸ்தவம் வந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டன. தன் சீடர்களிடம் கிறிஸ்து கட்டளையிட்ட நற்செய்தி அறிவிப்பு பணியின்மூலம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அனுதினமும் வளர்ந்துகொண்டிருப்பதுதான் நிதர்சனமான உண்மை. கிறிஸ்தவர் செய்வதுபோல இஸ்லாமியர்கள் அவர்களுடைய மதத்தை இந்தியாவில் பரப்பினாலும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் அன்பின் நற்செய்தி ஊழியத்தை இறை வழிகாட்டுதலோடு, தீர்க்கதரிசன வெளிப்பாடுகளோடு, அறப்பணிகளோடு, தியாக சிந்தையோடு, அற்புத விடுதலை ஊழியங்களை அற்பணித்து செய்வதுபோல அவர்கள் செய்யவில்லை. கிறிஸ்தவ ஊழியர்கள் சந்து பொந்தெல்லாம் நுழைந்து அவமானங்கள், துன்பங்களை அனுபவித்து மக்களை அக்கரையாக ஆதாயம் செய்வதுபோல இஸ்லாமியர்கள் இந்தியாவில் முனைப்போடு செயலாற்றவில்லை. ஆனால், இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்தவர்களுடைய எண்ணிக்கை இந்தியாவில் 2.3 விழுக்காடு என்றும், கிறிஸ்தவம் வந்து 650 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள் 19 விழுக்காடு என்றும் அரசு மக்கள் தொகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால், கிறிஸ்தவர் நிஜமாகவே 2.3 விழுக்காடுதான் இருக்கிறார்களா என்று சற்று நிதானித்து சிந்தனை செய்தால் இது தவறான மதிப்பீடு என்பது எளிதில் விளங்கும். இந்த மதிப்பீட்டை அரசு வெளியிட்டிருப்பதற்கு அரசைக் குற்றம் சாட்டமுடியாது. ஏனெனில், இஸ்லாத்துக்கு ஒருவர் மாறிய உடனேயே தன்னை 'முஸ்லிம்' என்று அரசு பதிவேட்டில் பதிவு செய்துவிடுகிறார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஏழையாக இருந்தால்கூட அரசு கொடுக்கும் சலுகைகளை இழப்பதை பொருட்படுத்தாமல் தன் கடவுளை மதித்து தன்னை தைரியமாக இஸ்லாமியர் என பிரகடனம் செய்கிறார். ஆனால், பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் அப்படி பதிவு செய்வதில்லை. ஏனெனில், அரசு அதிகாரிகளிடம் இயேசுவை மறுதலித்து, *"நான் இந்து"* என்று பொய் சொன்னால்தான் இடஒதுக்கீடு வாங்கமுடியும். இந்துத்துவாவிலிருந்து மனம் திரும்பியோரில் பெரும்பான்மையானோர் இயேசுவை, 'அன்பே, கல்வாரி அன்பே', 'அருமை இரட்சகரே', 'கருணா மூர்த்தியே', 'சாந்த சொரூபியே' என்றெல்லாம் அழைத்தாலும், *பணம் முக்கியமா? இயேசு முக்கியமா?* என்று வரும்போது பணமே முக்கியம் என்பதுதான் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு என்பதே ஒரு கசப்பான உண்மை.
300 பேர் அங்கத்தினர்களாக இருக்கும் சபையில் 10 பேர் கூட கிறிஸ்தவர் என்று அரசாங்கத்தில் பதிவு செய்யவில்லை என்பதே ஒரு அசிங்கமான உண்மை.
1981-ல் நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிலுள்ள மீனாட்சிபுரம் என்னும் கிராமத்தில்; 900 ஏழை தலித் இந்துக்கள் இஸ்லாமியர்களாக மாறியபோது உடனேயே அவர்களுடைய பெயர்களை இஸ்லாமியர்கள் என்று அரசுப் பதிவேட்டில் பதிவு செய்தார்கள். அவர்கள் இந்து என்று பொய் சொல்லி சலுகை வாங்குவதில்லை. ஜமாத்தில் இஸ்லாமியராகவும், அரசுப்பதிவேட்டில் இந்துவாகவும் பதிவுசெய்து அவர்கள் நடிப்பதில்லை. இது அவர்களுடைய மார்க்கத்தின்மீது அவர்களுக்கு இருக்கும் பற்றுறுதியைக் காட்டுகிறது. அவர்கள் அரசாங்கத்திடம் பொய்சொல்லி சலுகை வாங்கக்கூடாது என்று மதத் தலைவர்களால் போதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அப்படி பொய் சொல்வது அவர்களுடைய கடவுளுக்கு இழுக்கு என்று போதிக்கிறார்கள். இஸ்லாத்துக்கு முரண்படும் கிறிஸ்தவனாக நான் இருந்தாலும், இஸ்லாமியர்களின் இந்த உண்மைத் தன்மையை மனதார பாராட்டுகிறேன். இஸ்லாம் ஒரு பிழையான மார்க்கம், கிறிஸ்தவம் மட்டுமே உண்மையான மார்க்கம் என்று பெருமையாக கிறிஸ்தவர்களாகிய நாம் பேசுகிறோம். ஆனால், வாழ்க்கை என்று வரும்போது பிறரை விட கிறிஸ்தவர்கள் கீழ்த்தரமாக அல்லவா இருக்கிறோம்!
"மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்"(மத்தேயு 5:20) என்றல்லவா கிறிஸ்து கூறுகிறார்!
உலகுக்கே நேர்மையை, அன்பை, நீதியை, தூய்மையை போதித்துக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களின் சொந்த வாழ்வு படுகேவலமாக உள்ளதே! இயேசு கிறிஸ்துவை தன் கடவுளாக, மீட்பராக ஏற்றுக்கொண்டு, ஒலிப்பெருக்கியில், தொலைக்காட்சியில் எங்கள் போதகம்தான் சரியானது என்று தொண்டை கிழிய முழங்கி பெருமைப்பட்டுக் கொள்ளும் பெரும்பான்மையான 'ஆவிக்குரிய' போதகர்களே கூச்சப்படாமல் 'இந்து' என்று பொய் சொல்லி இடஒதுக்கீடு வாங்குகிறார்கள். இயேசுவை மறுதலித்து தங்களை 'இந்து' என்றே அரசுப் பதிவேட்டிலும், சான்றிதழ்களிலும் பொய்ப்பதிவு செய்திருக்கிறார்கள். 'பெந்தேகோஸ்தே' போதகர்கள்கூட தங்கள் பிள்ளைகளை 'இந்து ஆதிதிராவிடர்' என்று பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் கெடுவது மட்டுமல்ல; பிறரையும் கெடுத்து குட்டிச்சுவராக்குகிறார்கள். இப்படி தலைமுறைகளாக குற்றமனசாட்சியோடு வாழ்வதில் இரட்சிப்பின் சந்தோஷம் எங்கே இருக்கப் போகிறது?
அரசாங்கத்தின் பார்வையில் இவர்கள் 'இந்து' என்றே கணக்கிடப்படுகிறார்கள். இது அரசாங்கத்தை ஏமாற்றுவது மட்டுமல்ல; இயேசுவின் முகத்தில் கரியை பூசி அவமானப் படுத்துவது அல்லவா! போதகர்களே போலியெனில், சாதாரண விசுவாசிகளுடைய நிலைமையை எண்ணிப் பாருங்கள்.
இந்துக்களுக்கென்று அரசு கொடுக்கும் இடஒதுக்கீட்டை கிறிஸ்தவர்களாக மாறியபின்பும் 'இந்து' என்று பொய் சொல்லி திருடுவதை எப்படி ஒரு கண்ணியமான வாழ்வியல் என்று புறமக்கள் ஏற்றுக்கொள்வார்கள்? எல்லாரும் இயேசுவை நேரில் பார்த்து கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, கிறிஸ்தவர்களைப் பார்த்துதான் மாறுகிறார்கள். பிறருக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய தலைவர்களே கீழ்த்தரமான பொய்யர்களாக இருக்கும்போது கிறிஸ்தவத்தை பிறர் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார் (நீதிமொழிகள் 12:22), பொய்யை விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள் (எபேசியர் 4:25) என்றல்லவா புனிதநூல் நமக்கு கற்றுத் தருகிறது!
நற்செயல்களைச் செய்வதில் எல்லாவகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு. நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு. யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாத நலந்தரும் வார்த்தைகளைப் பேசு. அப்பொழுது எதிரிகள் நம்மைப்பற்றித் தீயன பேச எதுவுமின்றி வெட்கிப் போவார்கள் (தீத்து 2:7,8) என்றல்லவா திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார்!
உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத்தேயு 5:16) என்று நம் இயேசு பெருமான் அறிவுறுத்துகிறார்.
நமது வீட்டுக்குள் புகுந்து நம் வீட்டுப் பொருட்களை வேறொருவர் திருடிச் செல்வதை எப்படி நம்மால் சகிக்க முடியும்? அதுபோல இந்துக்களுக்கென்று அரசு கொடுக்கும் சலுகைகளை கிறிஸ்தவர்கள் சட்டவிரோதமாக திருடுவதை அந்த சலுகைகளின் உரிமையாளர்கள் எப்படி சகிப்பார்கள்? இந்துத்துவ கோட்பாடுகளை கொஞ்சம்கூட விரும்பாத இந்துக்கள்கூட, கிறிஸ்துவை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டு சபையோடு இணையாமல் இருப்பதன் காரணமே இடஒதுக்கீடுதான். அப்படி சலுகைக்காக அவர்கள் அந்த மதத்தை வருத்தத்தோடு சகித்துக்கொண்டு இருந்தால், அவர்களுடைய உணவு பாத்திரத்தையே பிடுங்குகிறார்களே இந்த கிறிஸ்தவர்கள்! இதுதான் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து கற்றுக்கொடுத்திருக்கும் ஆன்மீக போதனையா? தவறை யார் செய்தாலும் தவறுதானே. நுட்பமாக சிந்தித்துப் பாருங்கள்.
திருடர் இனித் திருடாமல் இருக்கட்டும். மாறாக, தேவையில் உழல்வோருக்குப் பகிர்ந்து கொடுக்கத் தங்களிடம் பொருள் இருக்கும் வகையில், தாங்களே தங்கள் கைகளால் நேர்மையோடு பாடுபட்டு உழைக்கட்டும் (எபேசியர் 4:28) என்று திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிறார். களவு செய்யாதே (விடுதலைப்பயணம் 20:15) என்பது கடவுள் இறைமக்களுக்கு கொடுத்த போதனை அல்லவா!
கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களில் கிறிஸ்தவ மாணவர்களை பெற்றோர் சேர்க்கும்போது பள்ளியிலுள்ள 'கிறிஸ்தவ' அதிகாரிகளே மதம் என்னும் இடத்தில் 'கிறிஸ்தவர்' என்று எழுதாமல், 'இந்து' என்று எழுத தவறாக வழிநடத்துகின்றனர். இந்த கொடுமையை யாரிடம் சொல்லி அழுவதென்றே தெரியவில்லை.
இப்படி கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் பெயர்களை இந்து என்றும் இஸ்லாமியர் என்றும் சுயநலத்தோடு பதிவு செய்திருப்பதாலேயே கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர் எனும் பட்டியலிலேயே இருக்கிறார்கள். மொத்தத்தில் கடவுள் கிறிஸ்தவர்களால் அவமானமடைந்து, ஏமாற்றப்படுகிறார்.
ஆண்டவர் புகழ்ச்சியடைந்தால் என்ன! இகழ்ச்சி அடைந்தால் என்ன! எனக்கு பட்டம், பணம், பதவி, புகழ் கிடைத்தால்போதும் என்று சொல்லும் சுயநலவாதிகளுக்கு நான் சொல்வது நிச்சயமாகவே பிடிக்காது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். இப்படி இரண்டும் கெட்டான் நிலைமையில் போதகர்களே இருந்துகொண்டு, "எல்லாரும் இயேசுகிட்ட வாங்க, உங்க இதயத்தை இயேசுவுக்கு தாங்க..." என பாடி ஆள் சேர்ப்பது, பிழைப்புக்காக கையிலெடுத்த தொழில்போல் அல்லவா இருக்கிறது! நமது சுயநல முயற்சிகளில் கடவுள் நம்மோடு நிற்பார் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? நாமே சந்தர்ப்பவாத மதில்மேல் பூனைகளாக நின்றுகொண்டிருக்க, பிறருக்கு கிறிஸ்தவ போதனைகளை கற்றுக்கொடுப்பது அர்த்தமற்ற செயல் அல்லவா! நாமே சாத்தானிடம் சிக்கிக்கொண்டிருக்க, அப்படி சிக்கியிருக்கும் பிறரை நாம் எப்படி காப்பாற்றமுடியும்? இந்து என்று கூறி இடஒதுக்கீடு வாங்கி பணக்காரனாக மாறிவிட்டு பொதுவெளியில், "இயேசு என்னை உயர்த்தினார்" என்று அறிக்கை விடுப்பது மனசாட்சிக்கு எதிரான பித்தலாட்டம் அல்லவா! இந்து என்று பொய் சொல்லி தவறான வழியில் கிடைத்த வேலையில் அமர்ந்திருக்கும்போது, இந்த வேலையை உங்களுக்கு தந்தது கிறிஸ்தவ கடவுளா அல்லது இந்து கடவுளா? என்று யாராவது கேட்டால் மோசடி கிறிஸ்தவர்கள் நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம்?
திங்கள்முதல் சனிவரை இந்துத்துவ நம்பிக்கையாளராக அலுவலகத்தில் வாழ்ந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை, "இயேசு போதுமே" என்று பாட்டு பாடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இது கிட்டத்தட்ட ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயின் வாழ்வுபோல்தானே இருக்கிறது!
இந்துக்கள் தங்களை இந்துக்கள் என்று பதிவு செய்து அதனால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிப்பதை கடவுள் குற்றம் சாட்டமுடியாது. ஏனெனில், அவர்கள் வழிபடும் மார்க்கம் தவறானது என்பது அவர்களுக்கு தெரியாது. ஆனால், இயேசு கிறிஸ்துதான் நிஜமான கடவுளும், முடிவில்லா வாழ்வுக்கு ஒற்றை வழியாகவும் இருக்கிறார் என்று தெரிந்த பின்பு, அவரை மறுதலித்து, குறுக்குவழியில் செல்வத்தை தேடினால் அது இரட்சிக்கப்பட்டவர்களுக்கு எப்படி ஆசீர்வாதமாக இருக்கும்? அது சாபமாக முடிந்துள்ளது என்பதற்கு என்னிடம் சான்றுகள் உள்ளன. களங்கமில்லாத பிள்ளைகளின் எதிர்காலத்தை கெடுத்து நாசமாக்கும் கொடுமை அல்லவா அது! கிறிஸ்தவர்களே! நரகத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற வந்த நேச மீட்பரை மறுதலிப்பது சின்ன பாவமல்ல. அது தலைமுறைகளை கெடுக்கும் படுபாதகம். சாபத்தோடு, குற்ற மனசாட்சியோடு, நிம்மதி இல்லாமல், பங்களாவில், பணக்காரனாக வாழ்வதைவிட, இயேசுவின் அருளோடு, நல்ல மனசாட்சியோடு, நிம்மதியாக ஒரு எளிய வாழ்வு வாழ்வது அல்லவா மேன்மையானது!
"மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்" (மத் 10:32,33) என்று ஆண்டவர் இயேசு நம்மை எச்சரிக்கிறார். அவரோடு (இயேசுவோடு) நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்; நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார் (2 திமொத்தேயு 2:12) என்று திருத்தூதர் பவுல் கூர்மையாக அறிவுறுத்துகிறார். இயேசு கிறிஸ்துவே நம்மை மறுதலித்தால் நாம் எப்படி பரலோகத்துக்கு போகமுடியும்?
பேராசையைப் பற்றி மக்களிடம் பேசும்போது "எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது" என்றார் கிறிஸ்து இயேசு. அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார். "செல்வனாயிருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், 'நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!' என்று எண்ணினான். 'ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன். பின்பு, 'என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு' எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், 'அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னைவிட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே. இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: 'ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உயிர்வாழ எதை உண்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ கவலைகொள்ளாதீர். உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தவையல்லவா? காகங்களைக் கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை; அவற்றுக்குச் சேமிப்பு அறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?' (லூக்கா 12:15-24) என்றார்.
ஒரு இந்து 'தலித்' சகோதரன், "ஐயா, என் வீட்டுக்கு அருகிலுள்ள எங்கள் கிறிஸ்தவ உறவினர்கள் எங்களிடம் இயேசுவைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் இந்து என்று சொல்லி இடஒதுக்கீட்டையும் வாங்குகிறர்கள். இயேசுவை பின்பற்றினாலும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில் மாற்றங்கள் எதையும் எங்களால் பார்க்கமுடியவில்லை. நான் என் உறவினர்களின் எதிர்ப்புகளை தாங்கிகொண்டு கிறிஸ்தவராக மாறினாலும், வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டுமானால், என் உறவினர்களைப்போல நான் 'இந்து' என்று பொய் சொல்லவேண்டும். அப்படி குற்ற உணர்வோடு கிறிஸ்தவராக இருப்பதைவிட நான் இந்துவாகவே இருந்துவிடுகிறேனே!" என்றார். இயேசு தரும் இலவச இரட்சிப்பை பிறர் பெற்றுக்கொள்ள கிறிஸ்தவர்களின் வைராக்கியமற்ற வாழ்வு எவ்வளவு தடையாக இருக்கிறது என்று நாம் நுட்பமாக விளங்கிக்கொள்ளவேண்டும்.
இயேசுவை மறுதலிக்காதவர்கள்மூலம்தான் கடவுள் இந்த உலகை தன் வசப்படுத்துவார். "உன் செயல்களை நான் அறிவேன். இதோ, எவராலும் பூட்ட முடியாத கதவை நான் உனக்குமுன் திறந்து வைத்திருக்கிறேன். சிறிதளவு வலிமைதான் உன்னிடம் இருக்கிறது. இருப்பினும், நீ என் வாக்கைக் கடைப்பிடித்தாய்; என் பெயரை மறுதலிக்க வில்லை" (திருவெளிப்பாடு 3:8) என்று கடவுள் அறுதியிட்டு கூறுகிறார்
ஒரு ஏழைத்தாய் தன் மகனை கடினமாக உழைத்து படிக்க வைக்கிறார். மகன் படித்து, உயர்மதிப்பெண் பெற்று, பட்டணத்துக்குச் சென்று உயர்பதவியில் அமர்கிறார். அங்கேயே ஒரு பெண்ணை சந்தித்து திருமணம் செய்கிறார். ஒரு வீட்டை வாங்குகிறார். ஒருநாள் பட்டணத்தில் வாழும் தன் மகனுடைய குடும்பத்தை சந்திப்பதற்கு அந்த மூதாட்டி ஆவலோடு வருகிறார். ஒருநாள் மகனுடைய அலுவலக நண்பர் ஒருவர் இவருடைய வீட்டுக்கு வருகிறார். இந்த கிராமத்து மூதாட்டியைக் கண்ட நண்பர், "யார் இந்த பெண்மணி?" என்று கேட்கிறார். தன் தாய் என்று சொன்னால் தன் சமூக அந்தஸ்து குறைந்துவிடும் என்று நினைத்து, "இவள் என் வீட்டு வேலைக்காரி" என்று மகன் பொய் சொல்கிறார். இதை அந்த மூதாட்டி தன் சொந்த காதாலேயே கேட்டுவிட்டார். இப்போது அந்த தாயின் மனம் எவ்வளவு வலித்திருக்கும் என்று நான் சொல்லாமலேயே உங்களால் புரிந்துகொள்ளமுடியும்.
இதுபோலத்தான் இடஒதுக்கீடு வாங்குவதற்காக தன்னை 'இந்து' என்று கிறிஸ்தவர்கள் பொய் சொல்லும்போது மனிதர்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்த அந்த கருணாமூர்த்தி எவ்வளவு மன வேதனைப்படுவார் என்பதை நாம் உணர்வு பூர்வமாக புரிந்துகொள்ளவேண்டும். இந்து என்று பொய் சொல்லி வேலைக்கு விண்ணப்பித்த சில கிறிஸ்தவர்களின் வீட்டுக்கு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும்போது, இந்துத்துவ படங்களை சுவரில் தொங்க விட்ட துரோக காட்சிகளையும் இந்தியாவில் காணமுடிகிறது. பேதுரு இயேசுவை மறுதலித்தாலும் அவரது தவறை நினைத்து மனம் வருந்தி அவர் சில நிமிடங்களுக்குள் மனம் கசந்து அழுதார். ஆனால், இந்திய கிறிஸ்தவர்கள் மூன்று தலைமுறைகளாக இந்து என்று பொய் சொல்கிறார்களே! இந்த பச்சை மறுதலிப்பை கடவுள் சும்மா விட்டுவிடுவார் என்று நினைக்கிறீர்களா?
இயேசுவின்மூலம் ஒரு காரியத்தை சாதிப்பதற்காக "இயேசுவே நீரே ஆண்டவர்! உமக்கே ஆராதனை! உமக்காகத்தான் வாழ்கிறேன்! உம்மைத்தான் நேசிக்கிறேன்!" என்று கத்தி கூச்சலிட்டு நடனமாடுவதும், அந்த காரியத்தை சாதித்தபின் அவரை கருவேப்பிலையைப் போல புறக்கணிப்பதும் எப்படி ஆண்டவருக்கு புகழ்ச்சியை கொண்டுவரும்? அது அவரை இழிவுபடுத்துவதல்லவா! நம்மை யாராவது அப்படி புறக்கணித்தால் நம் நெஞ்சம் பதறாதா?
ஒரு இந்துத்துவ அரசியல்வாதி ஒருமுறை பேசும்போது, "நான் இந்து என்று உண்மையை சொல்லி இந்துக்களுக்கு என்று கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை வாங்கும் இந்துக்கள் ஒருபுறம். நான் இந்து என்று பொய் சொல்லி இந்துக்களுக்கு என்று கொடுக்கப்படும் இடஒதுக்கீட்டை வாங்கும் கிறிஸ்தவர்கள் மறுபுறம். இதில் நேர்மையானவர் யார்?" என்று கேட்டார். கிறிஸ்தவர்கள் நாம் என்ன பதிலை சொல்லப் போகிறோம்? இந்து என்று பொய் சொல்லி இடஒதுக்கீடு வாங்கும் கிறிஸ்தவர்களையே பரலோகம் ஏற்றுக்கொள்ளுமானால், இந்துக்களை ஏற்றுக்கொள்ளாதா?" என்று இந்து சகோதரர்கள் கேட்டால் நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? நிலையில்லாத இம்மண்ணுலகின் அற்ப இன்பங்களுக்காக அந்த பரலோகத்தை இழந்துவிடுவது முட்டாள்தனம் அல்லவா! சலுகைகளுக்காக இயேசுவை மறுதலிக்கும் நாம் இயேசுவுக்காக உயிரை எப்படி கொடுக்க போகிறோம்? அரசு வேலைக்காக இயேசுவை மறுதலிக்கும் நாம், மதத்தீவிரவாதிகளின் துப்பாக்கிக்கு முன் எப்படி இயேசுவை அறிக்கையிடமுடியும்?
"உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை; உலகத்தைவிட்டு எதையும் கொண்டு போகவும்முடியாது. எனவே உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம். செல்வத்தைச் சேர்க்க விரும்புகிறவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள். அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள். கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு" (1திமொத்தேயு 6:7-11) என்று பணஆசைக்கு எதிராக திருத்தூதர் பவுல் தீர்க்கமாக போதிக்கிறார்.
மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்" (மத்தேயு 6:19-21) என்று கடவுள் அறிவுறுத்துகிறார்.
"தன்னை இந்து என்று பொய் சொல்லி சலுகை வாங்கும் ஏமாற்றுப்பேர்வழி கிறிஸ்தவனுக்கும், 30 வெள்ளிக் காசுகளுக்காக தன் நண்பன் இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாசுக்கும் பெரிய வித்தியாசம் என்ன இருக்க முடியும்?" என்று ஒரு இந்து சகோதரர் நியாயமாக கேட்டு என் இதயத்தை மிகவும் வேதனைப்படுத்திவிட்டார். யூதாசைபோல நாமும் இயேசுவுக்கு துரோகம் செய்துவிட்டு யூதாசை 'துரோகி' என்று சொல்லமுடியுமா? யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுத்து வாங்கிய காசு அவனுக்கு பயனற்று போனது. அதை வைத்து என்னென்ன செய்யலாம் என போட்ட திட்டங்கள் எல்லாம் தரைமட்டம் ஆனது. குற்றமனசாட்சி அவனை குடைந்தெடுத்தது. அநியாயமாக சம்பாதித்த அந்த 30 வெள்ளிகாசை அவன் தேவாலயத்திலே எறிந்துவிட்டான். அவன் இயேசுவை காட்டிக்கொடுத்து கிடைத்தது சிறிய தொகை அல்ல. அந்த காசை யூதர்கள் எடுத்து யூதர்கள் அல்லாதவர்களை அடக்கம் பண்ணுவதற்காக கல்லறைத் தோட்டம் வாங்கியிருக்கிறார்கள். அப்படியானால் அது எவ்வளவு பெரிய தொகை என்று பாருங்கள். மக்களுக்கு நன்மையை மட்டுமே செய்த கருணையுள்ளம் கொண்ட இயேசுவின் குழந்தை மனதை அநியாயமாக காட்டிக் கொடுத்துவிட்டேனே! என்ற குற்ற மனசாட்சியிலேயே யூதாஸ் தற்கொலை செய்துகொண்டான். அதுபோல இந்து என்று கிறிஸ்தவன் பொய் சொல்லி வாங்கும் சலுகை, படிப்பு, பதவி, பணம் எல்லாமே கிறிஸ்தவர்களுக்குள் குற்றமனசாட்சியை உருவாக்கி கடைசியாக பயனற்று போயிருக்கிறது என்பதே மறுக்கமுடியாத வரலாறு. அவர்கள் சபையில் உயர்பதவிகளில் இருந்தாலும் நடைபிணமாகவே வாழ்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தின் சில கிராமங்களுக்கு ஊழியம் செய்ய நான் போயிருக்கும்போது, கிறிஸ்துவை மறுதலித்து கிடைக்கும் இடஒதுக்கீடுகளால் நல்ல வேலை கிடைத்தாலும், இந்த அர்த்தமற்ற இரட்டைவேட வாழ்க்கையால் பல கிறிஸ்தவர்கள் நிம்மதியின்றி வாழ்வதாக கண்ணீரோடு புலம்பினார்கள். தன் சீடர்கள் சந்தர்ப்பவாதிகளாக வாழ்வதற்கு கிறிஸ்து சொல்லிக் கொடுக்கவில்லை. நம்மையே ஜீவ பலியாக அவருக்கு கொடுக்க எதிர்பார்க்கிறார். இயேசுவுக்காக நாம் தைரியமாக நிற்கும்போது கிறிஸ்தவர்களே பலர் உங்களைப் பார்த்து, "இவன் பிழைக்கத் தெரியாத முட்டாள்" என்று சொல்வார்கள். கவலைப்படவேண்டாம்.
கிறிஸ்து சொல்கிறார்: "என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்" (மத்தேயு 5:12).
ஒருமுறை பாபிலோன் என்னும் நாட்டை ஆண்டுவந்த அரசர் நெபுகத்னேசர் என்பவர் 60 முழ உயரமுள்ள, பொன்னால் செய்யப்பட்ட ஒரு சிலையை நிறுத்தி, அந்த சிலையை தன் நாட்டு மக்கள் எல்லாரும் வணங்க வேண்டும் என்றும், அதை வணங்க மறுப்பவர் தீச்சூளையில் தூக்கி எறியப்படுவர் என்றும் ஆணை பிறப்பித்தார். அப்போது உண்மையான கடவுளை வணங்கிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் விசுவாச வீரர்கள், "நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனம் இல்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்; நீர் நிறுவிய பொற் சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்" என்றார்கள் (தானியேல் 3:17,18). இவர்களுடைய வார்த்தைகளில் இருக்கும் உறுதியை பாருங்கள்.
ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள் (மத்தேயு 10:28) என்று கிறிஸ்து தைரியமூட்டுகிறார்.
அன்புக்குரிய சகோதரமே! நமக்கு உணவு, உடை, உறைவிடம் எல்லாம் தேவைதான். நம் பிள்ளைகளை நாம்தான் பராமரித்து வளர்க்கவேண்டும். ஆனால், அதற்காக பேதுரு இயேசுவை மறுதலித்ததுபோல, யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்ததைப்போல நம் அப்பாவை மறுதலித்து, காட்டிக்கொடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டுமா? அது நன்றிகெட்ட வாழ்வியல் அல்லவா! நமக்காக உயிரையே கொடுத்த அந்த உன்னத நேசரின் முகத்தில் காறி உமிழ்வது போன்ற துரோகச் செயல் அல்லவா அது! நம்மை நரகத்தீயில் இருந்து காப்பாற்ற தன் உயிரையே கொடுத்த இயேசுவை நேசிக்காதவன் சபிக்கப்படுவான் (1கொரிந்தியர் 16:22) என்று திருத்தூதர் பவுல் எச்சரிக்கிறார்.
காலாட்களோடு ஓடியே நீ களைத்துப்போனால், குதிரைகளோடு எவ்வாறு போட்டியிட முடியும்? அமைதியான நாட்டிலேயே நீ அஞ்சுகிறாய் என்றால், யோர்தானின் காடுகளில் நீ என்ன செய்வாய்? (எரேமியா 12:5) என்று ஆண்டவர் கேட்கிறார்.
இயேசுவுக்காக எதையும் இழக்கலாம். ஆனால், எதற்காகவும் இயேசுவை இழந்து விடக்கூடாது" என்று ஒரு ஊழியக்காரர் வைராக்கியத்தோடு சொன்னதை இங்கே நினைவுகூர்கிறேன்.
இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாயிருந்தால், எல்லா மனிதரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம் (1கொரிந்தியர் 15:19) என்கிறார் திருத்தூர் பவுல். அதாவது, இம்மைக்குரிய நன்மைகளுக்காக மட்டும் இயேசுவை நம்பும் கிறிஸ்தவர்கள் இயேசுவை நம்பாத பிறரைவிட பரிதாபமான நிலையில் இருக்கிறார்கள்; என்று வேதம் கூறுகிறது.
இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்!
'பெரும்பான்மையான பாஸ்டர்களே இந்து என்று பொய் சொல்லி இடஒதுக்கீடு வாங்குகிறார்களே! அப்படியானால், நான் ஏன் அப்படி வாங்கக்கூடாது?' என்று தயவுசெய்து அற்பத்தனமாக நினைக்காதீர்கள். ஊழியம் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்புக்காக வந்தவர்களை முன்மாதிரியாக வைக்காதீர்கள். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து, "வெளியே மக்களுக்கு நேர்மையாளராய்த் தோற்றம் அளிக்கிறார்கள். ஆனால் உள்ளேயோ போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறார்கள்" (மத்தேயு 23:28) என்று இயேசு எச்சரிக்கிறார். நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்கள் சிலரே. அவர்கள் இப்படி தங்கள் கடவுளை மறுதலிக்கமாட்டார்கள். அதை நியாயப்படுத்தவும் மாட்டார்கள். இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே (மத்தேயு 7:13,14) என்று கர்த்தர் எச்சரிக்கிறார்.
"இந்து என்று பொய் சொல்லி சலுகை வாங்கினால் பரலோகத்துக்கு போக முடியாதா ஐயா?" என்று ஒருவர் மிகவும் அக்கரையாக கேட்டார். நான் சொன்னேன், "யாரெல்லாம் பரலோகத்துக்கு வருவார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால், இயேசுவை 30 வெள்ளிக் காசுகளுக்காக காட்டிக்கொடுத்த யூதாஸ் பரலோகத்துக்கு வந்தால், இந்து என்று பொய் சொல்லி சலுகை வாங்கும் கிறிஸ்தவனும் பரலோகத்துக்கு வருவான்" என்றேன்.
இவ்வாறு நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன் (திருவெளிப்பாடு 3:16), பொய்யர் இரண்டாம் மரணமாகிய அக்கினி கடலில் பங்கடைவார்கள் (திருவெளிப்பாடு 21:8) என்று கர்த்தர் எச்சரிக்கிறார்.
மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார் (திருத்தூதர் பணிகள் 17:30).
எனவே, சந்தர்ப்பவாத சுயநலவாதிகளாக நாம் வாழ்ந்தது போதும். இனியாவது இயேசுவுக்காக வாழ்வோம். தயவுசெய்து உடனே இந்திய அரசு பதிவேட்டிலும், சான்றிதழ்களிலும் நம்மை கிறிஸ்தவர் என்று பதிவு செய்து நாம் கிறிஸ்துவின் சீடர் என்று தைரியமாக அறிக்கை விடுப்போம். இயேசு உயிரை கொடுத்து நம்மை மீட்டார் என்பதற்கு நன்றிக்கடனாக இதை மனமுவந்து செய்வோம். இதை வாசிக்கும் சில போதகர்கள் இந்த என் கருத்தை தவறு என்று சொல்லலாம். ஏனெனில் போதகர்களில் பலர் இயேசுவின் பெயரைச் சொல்லி பிழைக்க வந்தவர்கள். எனவே, போதகர்கள் போதிப்பது வேதத்தோடு ஒத்துப் போகிறதா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டிய முக்கியமான கடமை நமக்கு உண்டு. பரம கானானின்மேல் நமது கண்களைப் பதித்து ஓடுவோம்.
நீ தீங்கை காணாதிருப்பாய் (செப்பனியா 3:15) என்று சொன்ன அதே கடவுள்தான் பவுல் மூலமாக, நல்ல போர்ச் சேவகனாக தீங்கு அநுபவி (2திமொத்தேயு 4:5) என்றும் கூறுகிறார். இயேசுவை அறிக்கையிடுவதன் மூலம் நாம் ஏழ்மையாக மாறும் நிலை வந்தாலும் இயேசுவின் மீதுள்ள அன்பில் நாம் பின்வாங்கக்கூடாது. கரம் பிடித்தவர் நம்மை கைவிடமாட்டார். குறைவின்றி நடத்தியவர் இனியும் நடத்துவார் என்னும் உறுதிப்பாடு நமக்கு தேவை.
நமது தற்போதைய அவசர கடமை
1. உங்கள் கிராம நிர்வாக அதிகாரிமூலம் வட்டாட்சியரிடம்; (தாசில்தார்) மதமாற்றுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தை கீழே பதிவு செய்திருக்கிறேன்.
அனுப்புனர்,
உங்கள் பெயர் மற்றும் முகவரி
பெறுநர்
வட்டாட்சியர்,
வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் முகவரி
பொருள்: மதமாற்ற சாதிமறுப்பு சான்றிதழ்
அய்யா,
மேற்கண்ட முகவரியில் வசித்து வரும், (உங்கள் பெயர்) என்கிற நான் கிறிஸ்தவத்தை தழுவிக்கொண்டதால், எனக்கு (ஜாதி குறிப்பிடாமல்) இந்திய கிறிஸ்தவன் (ஐனெயைn ஊhசளைவயைn) என்று மதமாற்ற சான்றிதழ் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
(உங்கள் கையெழுத்து)
உங்கள் குடும்ப அட்டை மற்றும் திருமுழுக்கு சான்றிதழ் நகல்களை அத்துடன் இணைக்கவேண்டும். கிராம நிர்வாக அதிகாரி அதை பரிசீலித்து அந்த மனுவை அவர் உங்கள் வட்டார வருமான ஆய்வாளருக்கு உங்கள் மூலம் அனுப்புவார். அவருடைய பரிசோதனைக்குப்பின் அது வட்டாட்சியர் அலுவலகத்துக்கு உங்கள்மூலம் அனுப்பப்படும். அவர் உங்களுக்கு மதமாற்ற சாதிமறுப்பு சான்றிதழ் தருவார்.
2. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது சாதி என்னுமிடத்தில் 'சாதி இல்லை' என்று எழுதவேண்டும்.
3. மக்கள்தொகை கணக்கெடுக்க அரசு அதிகாரிகள் வரும்போது அவர்கள் உங்கள் சாதியைக் கேட்டால் 'சாதி இல்லை' என்று தவறாமல் தெளிவாக சொல்லவேண்டும்.
4. அரசு பதிவேட்டில் நீங்கள் கிறிஸ்தவர் என்று பதிவு செய்யவேண்டும். அது சம்பந்தமாக ஏதாகிலும் சந்தேகம் இருந்தால் எனக்கு தெரிந்த நம் அன்பு சகோதரர் சாமுவேல் தாமஸ் (9003131405, 8248523665) அவர்களை அணுகலாம்.

Comments
Post a Comment