Posts

Showing posts from March, 2020

கிறிஸ்துவை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்கள்

*கிறிஸ்துவை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்கள்* இந்தியாவுக்கு கிறிஸ்தவம் வந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டன. தன் சீடர்களிடம் கிறிஸ்து கட்டளையிட்ட நற்செய்தி அறிவிப்பு பணியின்மூலம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அனுதினமும் வளர்ந்துகொண்டிருப்பதுதான் நிதர்சனமான உண்மை. கிறிஸ்தவர் செய்வதுபோல இஸ்லாமியர்கள் அவர்களுடைய மதத்தை இந்தியாவில் பரப்பினாலும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் அன்பின் நற்செய்தி ஊழியத்தை இறை வழிகாட்டுதலோடு, தீர்க்கதரிசன வெளிப்பாடுகளோடு, அறப்பணிகளோடு, தியாக சிந்தையோடு, அற்புத விடுதலை ஊழியங்களை அற்பணித்து செய்வதுபோல அவர்கள் செய்யவில்லை. கிறிஸ்தவ ஊழியர்கள் சந்து பொந்தெல்லாம் நுழைந்து அவமானங்கள், துன்பங்களை அனுபவித்து மக்களை அக்கரையாக ஆதாயம் செய்வதுபோல இஸ்லாமியர்கள் இந்தியாவில் முனைப்போடு செயலாற்றவில்லை.  ஆனால்,  இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்தவர்களுடைய எண்ணிக்கை இந்தியாவில் 2.3 விழுக்காடு என்றும், கிறிஸ்தவம் வந்து 650 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள் 19 விழுக்காடு என்றும் அரசு மக்கள் தொகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால், கிறிஸ்தவர் நிஜமாகவே 2.3 விழுக...

சனாதன தர்மம்

"இந்து" என்ற வார்த்தையின் அர்த்தமும் தோற்றமும் இந்து என்ற சொல் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.  இந்த வார்த்தை எவ்வாறு உருவானது என்பது பலருக்கு தெரியாது.  இந்தியாவில், சில அரசியல்வாதிகள் இந்து மற்றும் இந்துத்துவா என்ற சொற்களை வகுப்புவாத மேலோட்டங்களுடன் சில சித்தாந்தத்தை அல்லது கட்சியை ஊக்குவிக்க அல்லது எதிர்க்க பயன்படுத்துகின்றனர்.  உலகின் பிற பகுதிகளுக்கு, இந்து மற்றும் இந்து மதம் என்பது திட்டவட்டமான மத அமைப்பைச் சேர்ந்த ஒரு தொகுப்பைக் குறிக்கிறது.  உண்மை என்னவென்றால், "இந்து" மற்றும் "இந்தியா" ஆகிய இரண்டு வார்த்தைகளும் வெளிநாட்டு வம்சாவளியைக் கொண்டுள்ளன.  "இந்து" என்ற சொல் ஒரு சமஸ்கிருத வார்த்தையோ அல்ல, இந்த வார்த்தை இந்தியாவின் எந்த சொந்த பேச்சுவழக்குகளிலும் மொழிகளிலும் காணப்படவில்லை.  "இந்து" என்பது ஒரு மதச் சொல் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  பண்டைய வேத நூல்களில் "இந்து" என்ற வார்த்தையின் குறிப்பு எதுவும் இல்லை.  சிந்து நதியை பெர்சியர்கள் சிந்து என்று குறிப்பிடுவதாகக் கூறப்படுகி...

இந்தியா என் தாய்நாடு அனைத்து இந்தியரும் என் சகோதரங்களே.

இந்தியர்கள் எல்லாரும் இந்துக்களே. ஒரு *அரேபியர்* எந்த மதத்துக்கு மாறினாலும் அவர் *அரேபியர்தான்.* ஒரு *அமெரிக்கர்* எந்த மதத்துக்கு மாறினாலும் அவர் *அமெரிக்கர்தான்.* ஒரு *ஆப்பிரிக்கர்* எந்த மதத்துக்கு மாறினாலும் அவர் *ஆப்பிரிக்கர்தான்.* அதுபோல ஒரு *இந்தியர்* எந்த மதத்துக்கு மாறினலும் அவர் *இந்தியர்தான்.* இந்தியாவுக்கு *இந்தியா* என்ற பெயர் வந்து 100 ஆண்டுகள்கூட ஆகவில்லை. இந்தியாவின் பழைய பெயர் *இந்து தேசம்* ஆகும். இந்த தகவல் கிறித்தவர்களின் புனித புத்தகமாகிய பைபிளில் (எஸ்தர் 1:1) எழுதப்பட்டுள்ளது. *இந்து* என்பது ஒரு நாட்டின் பெயர்தானேதவிர அது ஒரு *மதத்தின் பெயர் அல்ல.* ஆக, இந்தியர்கள் எல்லாரும் சட்டபூர்வமாக இந்துக்களே. இதை நாம் நுட்பமாக விளங்கிக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு இந்தியனும் இந்திய மண்ணின் கலாச்சாரத்தை பின்பற்றவேண்டும். அப்போதுதான் *சமுதாயம் அமைதியாக பயணிக்கும்.* இந்தியனுடைய வயிற்றில் பிறந்துவிட்டு அமெரிக்கனுக்கு பிறந்தவனைப்போல அலப்பறை செய்வது அசிங்கமான வாழ்வியல். ஆனால், இந்திய கலாச்சாரம் தாங்கள் பின்பற்றும் மதகொள்கைகளுக்கு எதிராக இருந்தால் அதை மக்கள் மன்றத்தில் அறிவித்து ஒரு...

கிறிஸ்தவத்தின் அடிப்படை

*கத்தோலிக்கர்களை* _சிலை வழிபாட்டினர்_ என்று *CSI* சபையினர் புறக்கணித்துவிட்டார்கள். CSI சபையின் _ஞானஸ்நானம் சரி இல்லை_ என்று *பாப்திஸ்துகள்* சொல்கிறார்கள்.  பாப்திஸ்து சபையை _அனல் இல்லாத பாரம்பரிய சபை_ என்று *AG* சபையினர் சொல்லிவிட்டார்கள். AG சபையின் பாஸ்டர் மீசை வைத்திருப்பதாலும், அவர் திருமணம் செய்திருப்பதாலும் அதை ஒரு _ஆவிக்குரிய சபையாகவே_ *TPM* மக்கள் கணக்கில் எடுக்கமாட்டார்கள். TPM மக்கள் வேறு யாரிடமும் _சிரிக்ககூடமாட்டார்கள்._ *அதுதான் பரிசுத்தம்* என்று ஏகமனதாக முடிவெடுத்து விட்டார்கள். இவர்கள் ஒருவரையும் *யேகோவாவின் சாட்சிகள்* _கிறிஸ்தவர்கள்_ என்றே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். _"நாங்கள்தான் சரியாக நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறோம்”_ என்கிறார்கள் *இயேசு நாமக்காரர்கள்.* இவர்கள் அனைவரையும் பார்த்து _"நாங்கள்தான் சரியான நாளில் கடவுளை ஆராதிக்கிறோம்"_ என்று *ஏழாம் நாள்காரர்கள்* சொல்கிறார்கள். _"விசுவாசிகள் செய்த குற்றங்களை பாஸ்டரிடம் அறிக்கையிடாவிட்டால் நரகத்துக்கு போவார்கள்"_ என்று *புதிய எருசலேம்"* சபையினர் அறிக்கை விடுகிறார்கள். இவர்கள் _ஒருவருடைய ”சபை...