Posts

கிறிஸ்துவை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்கள்

*கிறிஸ்துவை இழிவுபடுத்தும் கிறிஸ்தவர்கள்* இந்தியாவுக்கு கிறிஸ்தவம் வந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டன. தன் சீடர்களிடம் கிறிஸ்து கட்டளையிட்ட நற்செய்தி அறிவிப்பு பணியின்மூலம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அனுதினமும் வளர்ந்துகொண்டிருப்பதுதான் நிதர்சனமான உண்மை. கிறிஸ்தவர் செய்வதுபோல இஸ்லாமியர்கள் அவர்களுடைய மதத்தை இந்தியாவில் பரப்பினாலும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் அன்பின் நற்செய்தி ஊழியத்தை இறை வழிகாட்டுதலோடு, தீர்க்கதரிசன வெளிப்பாடுகளோடு, அறப்பணிகளோடு, தியாக சிந்தையோடு, அற்புத விடுதலை ஊழியங்களை அற்பணித்து செய்வதுபோல அவர்கள் செய்யவில்லை. கிறிஸ்தவ ஊழியர்கள் சந்து பொந்தெல்லாம் நுழைந்து அவமானங்கள், துன்பங்களை அனுபவித்து மக்களை அக்கரையாக ஆதாயம் செய்வதுபோல இஸ்லாமியர்கள் இந்தியாவில் முனைப்போடு செயலாற்றவில்லை.  ஆனால்,  இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிறிஸ்தவர்களுடைய எண்ணிக்கை இந்தியாவில் 2.3 விழுக்காடு என்றும், கிறிஸ்தவம் வந்து 650 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள் 19 விழுக்காடு என்றும் அரசு மக்கள் தொகை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால், கிறிஸ்தவர் நிஜமாகவே 2.3 விழுக...

சனாதன தர்மம்

"இந்து" என்ற வார்த்தையின் அர்த்தமும் தோற்றமும் இந்து என்ற சொல் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.  இந்த வார்த்தை எவ்வாறு உருவானது என்பது பலருக்கு தெரியாது.  இந்தியாவில், சில அரசியல்வாதிகள் இந்து மற்றும் இந்துத்துவா என்ற சொற்களை வகுப்புவாத மேலோட்டங்களுடன் சில சித்தாந்தத்தை அல்லது கட்சியை ஊக்குவிக்க அல்லது எதிர்க்க பயன்படுத்துகின்றனர்.  உலகின் பிற பகுதிகளுக்கு, இந்து மற்றும் இந்து மதம் என்பது திட்டவட்டமான மத அமைப்பைச் சேர்ந்த ஒரு தொகுப்பைக் குறிக்கிறது.  உண்மை என்னவென்றால், "இந்து" மற்றும் "இந்தியா" ஆகிய இரண்டு வார்த்தைகளும் வெளிநாட்டு வம்சாவளியைக் கொண்டுள்ளன.  "இந்து" என்ற சொல் ஒரு சமஸ்கிருத வார்த்தையோ அல்ல, இந்த வார்த்தை இந்தியாவின் எந்த சொந்த பேச்சுவழக்குகளிலும் மொழிகளிலும் காணப்படவில்லை.  "இந்து" என்பது ஒரு மதச் சொல் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.  பண்டைய வேத நூல்களில் "இந்து" என்ற வார்த்தையின் குறிப்பு எதுவும் இல்லை.  சிந்து நதியை பெர்சியர்கள் சிந்து என்று குறிப்பிடுவதாகக் கூறப்படுகி...

இந்தியா என் தாய்நாடு அனைத்து இந்தியரும் என் சகோதரங்களே.

இந்தியர்கள் எல்லாரும் இந்துக்களே. ஒரு *அரேபியர்* எந்த மதத்துக்கு மாறினாலும் அவர் *அரேபியர்தான்.* ஒரு *அமெரிக்கர்* எந்த மதத்துக்கு மாறினாலும் அவர் *அமெரிக்கர்தான்.* ஒரு *ஆப்பிரிக்கர்* எந்த மதத்துக்கு மாறினாலும் அவர் *ஆப்பிரிக்கர்தான்.* அதுபோல ஒரு *இந்தியர்* எந்த மதத்துக்கு மாறினலும் அவர் *இந்தியர்தான்.* இந்தியாவுக்கு *இந்தியா* என்ற பெயர் வந்து 100 ஆண்டுகள்கூட ஆகவில்லை. இந்தியாவின் பழைய பெயர் *இந்து தேசம்* ஆகும். இந்த தகவல் கிறித்தவர்களின் புனித புத்தகமாகிய பைபிளில் (எஸ்தர் 1:1) எழுதப்பட்டுள்ளது. *இந்து* என்பது ஒரு நாட்டின் பெயர்தானேதவிர அது ஒரு *மதத்தின் பெயர் அல்ல.* ஆக, இந்தியர்கள் எல்லாரும் சட்டபூர்வமாக இந்துக்களே. இதை நாம் நுட்பமாக விளங்கிக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு இந்தியனும் இந்திய மண்ணின் கலாச்சாரத்தை பின்பற்றவேண்டும். அப்போதுதான் *சமுதாயம் அமைதியாக பயணிக்கும்.* இந்தியனுடைய வயிற்றில் பிறந்துவிட்டு அமெரிக்கனுக்கு பிறந்தவனைப்போல அலப்பறை செய்வது அசிங்கமான வாழ்வியல். ஆனால், இந்திய கலாச்சாரம் தாங்கள் பின்பற்றும் மதகொள்கைகளுக்கு எதிராக இருந்தால் அதை மக்கள் மன்றத்தில் அறிவித்து ஒரு...

கிறிஸ்தவத்தின் அடிப்படை

*கத்தோலிக்கர்களை* _சிலை வழிபாட்டினர்_ என்று *CSI* சபையினர் புறக்கணித்துவிட்டார்கள். CSI சபையின் _ஞானஸ்நானம் சரி இல்லை_ என்று *பாப்திஸ்துகள்* சொல்கிறார்கள்.  பாப்திஸ்து சபையை _அனல் இல்லாத பாரம்பரிய சபை_ என்று *AG* சபையினர் சொல்லிவிட்டார்கள். AG சபையின் பாஸ்டர் மீசை வைத்திருப்பதாலும், அவர் திருமணம் செய்திருப்பதாலும் அதை ஒரு _ஆவிக்குரிய சபையாகவே_ *TPM* மக்கள் கணக்கில் எடுக்கமாட்டார்கள். TPM மக்கள் வேறு யாரிடமும் _சிரிக்ககூடமாட்டார்கள்._ *அதுதான் பரிசுத்தம்* என்று ஏகமனதாக முடிவெடுத்து விட்டார்கள். இவர்கள் ஒருவரையும் *யேகோவாவின் சாட்சிகள்* _கிறிஸ்தவர்கள்_ என்றே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். _"நாங்கள்தான் சரியாக நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறோம்”_ என்கிறார்கள் *இயேசு நாமக்காரர்கள்.* இவர்கள் அனைவரையும் பார்த்து _"நாங்கள்தான் சரியான நாளில் கடவுளை ஆராதிக்கிறோம்"_ என்று *ஏழாம் நாள்காரர்கள்* சொல்கிறார்கள். _"விசுவாசிகள் செய்த குற்றங்களை பாஸ்டரிடம் அறிக்கையிடாவிட்டால் நரகத்துக்கு போவார்கள்"_ என்று *புதிய எருசலேம்"* சபையினர் அறிக்கை விடுகிறார்கள். இவர்கள் _ஒருவருடைய ”சபை...

சாதியம் இந்துத்துவ கொள்கை

*சாதியம் இந்துத்துவ கொள்கை* _"சாதியம் இந்தியாவை அழிப்பதற்குமுன் சாதியத்தை அழித்துவிடுங்கள்"_ என்று எழுத்தாளர் *K.R. வெங்கடாசலம்* எழுதுகிறார். அவர் சொல்வதுபோல சாதியம் இந்திய நாட்டையே அழிக்கும் அளவுக்கு ஆபத்தானதா இல்லையா என்று ஒவ்வொரு இந்தியனும் திறந்த மனதோடு ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சாதியம் என்னும் சமூகவிரோதக் கொள்கை கோடிக்கணக்கானோரின் உயிரைக் குடித்த ஒரு கொடிய தத்துவம் என்பது இந்திய சமூக வரலாற்றை படிக்கும் எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் தெரியும். முதன்முதலில் யாரால் அந்த கொள்கை உருவாக்கப்பட்டது என்னும் முக்கியமான கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு சாதியத்தை கடைபிடிப்போரை மட்டும் குற்றம் சாட்டுவதிலும் அர்த்தம் இல்லை. சாதியம் யாரால் உருவாக்கப்பட்டது என்பதை அறிய மனிதன் தோன்றிய வரலாற்றை ஆராயவேண்டும். இவ்வுலகில் மனிதன் தோன்றியது எப்படி என்பதைப் பற்றி பலரும் பல கொள்கைகளை சொல்கிறார்கள். என் அறிவுக்குத் தெரிந்த இரண்டு கொள்கைகளை இங்கே குறிப்பிடுகிறேன். மூன்றாம் கொள்கையை பிறகு விளக்குகிறேன். அவற்றை ஆய்வுசெய்தால்...

கிறிஸ்தவர்களால் வளரும் இஸ்லாம்

*கிறிஸ்தவர்களால் வளரும் இஸ்லாம்* கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிப் பாகுபாடுகள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு எவ்வளவு பெரிய காரணமாக இருக்கின்றன என்பதை பல சம்பவங்கள் நமக்கு தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. ஒருமுறை மதுரை மாநகரில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகில் ஓர் இளைஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் நற்செய்தி அறிவிப்பதற்காக, _"தம்பி உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?"_ என்று கேட்டேன். அதற்கு அவர், _"என்னுடைய பழைய பெயர் *டேனியல்.* கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்துக்கு மாறி இப்போது *ரமனுல்லா* என்று மாற்றியிருக்கிறேன்"_ என்றார். அவருடைய அந்த பதில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. _"நீங்கள் பிறந்ததே கிறிஸ்தவ குடும்பமா?"_ என்று கேட்டேன். _"இல்லை ஐயா! நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவன்; தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். இந்துவாக இருக்கும்போது சாதி துவேஷக் கொடுமைகளை அனுபவித்தேன். அந்த அவமானச் சாக்கடையிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருக்கும் போது, கிறிஸ்தவர்கள் எங்கள் கிராமத்துக்க...

இயேசு கிறிஸ்து ஏன் இவ்வளவு கொடுமையாக சாகவேண்டும்?

*இயேசு கிறிஸ்து ஏன் இவ்வளவு கொடுமையாக சாகவேண்டும்?* இந்த கேள்வியை இறை வார்த்தை தெரிந்த எந்த கிறிஸ்தவரிடம் கேட்டாலும், _*"பாவிகளை மீட்க* கிறிஸ்து இயேசு இவ்வுலகத்திற்கு வந்தார். இக்கூற்று உண்மையானது; எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது" (1 திமொத்தேயு 1:15),_ என்று சொல்வார். அந்த கூற்றை உறுதி செய்யும் சில வசனங்களை பார்ப்போம். _ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் *மீட்படைவீர்கள்"* (திருத்தூதர் பணிகள் 16:31)_ _"இயேசு ஆண்டவர்" என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் *மீட்புப் பெறுவீர்கள்.* (உரோமையர் 10:9)_ என்று திருத்தூதர் பவுல் இயேசு கிறிஸ்துவைப்பற்றி கூறினார். _இவராலேயன்றி (இயேசு) வேறு எவராலும் *மீட்பு இல்லை.* ஏனென்றால் நாம் *மீட்புப் பெறுமாறு* வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை(திருத்தூதர் 4:12)_ _அவரிடம் (இயேசுவிடம்) நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் *பாவமன்னிப்புப் பெறுவர்* (திருத்தூதர் 10:43)_ என்று திருத்...