*அம்பேத்கர் கிறிஸ்தவத்தை புறக்கணித்து ஆறு லட்சம் தலித் இந்துக்களோடு புத்த மதத்தை தழுவியது ஏன்?*

அறிஞர் அம்பேத்கர் இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து இழிவாக நடத்தப்பட்டு இந்துத்துவத்தால் கொடுமைப்படுத்தப்பட்டார். எனவே, அவர் விடுதலையைத் தேடி இந்துத்துவத்தைவிட்டு வெளியேறி, மதம் மாறத் திட்டமிட்டபோது, "அவர் ஏன் விடுதலை நாயகன் இயேசு கிறிஸ்துவின் அன்பின் மார்க்கமாகிய கிறிஸ்தவத்தை தேர்வு செய்யவில்லை?" என்ற நெருடலான கேள்வி என்னை ஆழமாக துளைத்தெடுத்தது. இந்த கேள்வியை எல்லா கிறிஸ்தவர்களும் தங்கள் போதகர்களிடம் கேட்கவேண்டும்.
இந்தியர்கள் இன்று பின்பற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்றும் அளவுக்கு மதிநுட்பமுடைய மாமேதை அல்லவா அம்பேத்கர்! அவரே கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளாதது ஏன் என்னும் கேள்விக்கு விடை கண்டுபிடிப்பது இந்த புத்தகத்துக்கு பொலிவு சேர்க்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஒரு சாதாரண நற்செய்தி அறிவிப்பாளராக இருந்த நான் ஒரு தீவிர சாதி மறுப்பு செயல்வீரனாக மாறியதற்கு அம்பேத்கர் கிறிஸ்தவத்தை புறக்கணித்துவிட்டு பௌத்தத்துக்கு மாறியதே ஒரு வலுவான காரணமாக இருந்தது. திருச்சபை வளர்ச்சியின்மீது குறைந்தபட்ச அக்கரை இருக்கும் கிறிஸ்தவர்கள்கூட இந்த கட்டுரையை படித்து மனம் திருந்துவார்கள் என்று நம்புகிறேன்.
அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒருமுறை மாட்டு வண்டியில் தன் சகோதரருடன் பயணம்செய்து கொண்டி ருந்தபோது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு இச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்துள்ளது.
ஒருநாள் நண்பகலில் சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கும்போது நாவறண்டதால் அருகிலிருந்த குளத்தில் தண்ணீர் குடிக்க முற்பட்டார் சிறுவன் அம்பேத்கர். இதைப் பார்த்துக்கொண்டிருந்த 'உயர்சாதியினர்' அம்பேத்கரை இரக்கமின்றி அடித்துவிட்டனர்.
பள்ளிக்கூடத்தில் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானையைத் தொட அம்பேத்கர் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர் வேண்டுமென்றால் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும்.
அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றபோது அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. இவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் பிறர் தொடமாட்டார்கள். இவர்களிடம் ஆசிரியர் கேள்விகள் கேட்பதும் கிடையாது. பள்ளியில் அமர்வதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வரவேண்டும்.
அம்பேத்கர் ஒருமுறை தாகத்துக்கு ஆதிக்க சாதிக்காரர்களிடம் தண்ணீர் கேட்டபோது, "அதோ! அதுதான் உனக்கான தண்ணீர்" என்று சாலையோர பள்ளத்தில் தேங்கிக்கிடந்த மழைத் தண்ணீரை காட்டியிருக்கிறார்கள்.
அம்பேத்கருக்கு முடிவெட்டி முடித்தபின் அவர் தாழ்த்தப்பட்டவர் என்று தெரிந்துகொண்ட ஒரு சவரத் தொழிலாளி, "கத்தியை எங்கே கழுவுவேன்?" என்று கத்தியிருக்கிறார். அதன்பின் அம்பேத்கருடைய சகோதரியே அவருக்கு பல தடவை முடிவெட்டியிருக்கிறார்.
அம்பேத்கர் உயர்வகுப்பு படிப்புக்கு போனதும் சமஸ்கிருதம் படிக்க மிகவும் விருப்பப்பட்டார். ஆனால், அவர் தாழ்த்தப்பட்டவர் என்று காரணம் கூறி சமஸ்கிருதத்தை அவருக்கு கற்பிக்க மறுத்துவிட்டனர் பள்ளி நிர்வாகிகள். தான் விரும்பிய பாடத்தை படிப்பதற்குகூட தன் சாதி தடையாக நிற்கிறதே என்று அவர் மனம் நொந்துபோனார்.
வீட்டிற்குள்ளே வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கும் மதிப்புகூட தாழ்த்தப்பட்டவர்களுக்கு கொடுக்காமல், வீட்டுக்குள் நுழைவதே தீட்டு என்று தீண்டத்தகாத சாதியாக ஒதுக்கப்பட்ட கொடுமைகளை நினைத்து அம்பேத்கர் மிகவும் மனவருத்தப்பட்டார்.
மும்பை எல்பின்ஸ்டன் கல்லூரியில் அம்பேத்கர் படித்துக்கொண்டிருக்கும்போது பாட இடைவேளையில் தேநீர் வாங்க கல்லூரிக்குள் இயங்கிவந்த உணவு விடுதிக்கு சென்றார். ஆனால், அவர் தாழ்த்தப்பட்டவர் என்னும் ஒரே காரணத்தால் அவருக்கு உணவுதர மறுத்துவிட்டனர்.
அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் அவருடைய திருமணம் நடத்த மும்பையில் எந்த திருமண மண்டபத்திலும், கோவிலிலும் இடம் கிடைக்கவில்லை. எனவே, பைகுலா கடைவீதியில் இருந்த ஒரு தகரக்கொட்டகையில் ஓர் இரவில் அவருக்கு திருமணம் நடந்தது.
பரோடா அரண்மனையில் மன்னருடைய இராணுவ செயலாளராக அம்பேத்கர் பணியாற்றிக்கொண்டிருந்தபோது இவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் இவருக்கு கீழ் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இவருக்கு கீழ்படிய மறுத்துவிட்டனர்.
சவுதார் என்னும் ஊரிலுள்ள குளத்தை 'தாழ்த்தப்பட்டோர் பயன்படுத்தக்கூடாது' என்று தடைவிதிக்கப்பட்டிருப்பது தெரிந்து அம்பேத்கர் அந்த குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்தார். அதன்பின், குளத்துக்கு தீட்டு கழிப்பதாக கூறி தண்ணீரில் மாட்டுச்சாணத்தையும், மாட்டு மூத்திரத்தையும் ஊற்றி அசுத்தப்படுத்தினார்கள் ஆதிக்க சாதியினர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் இந்து கோயில்களுக்குள் நுழையக்கூடாது என்ற சட்டம் இருந்தது. எனவே, நாசிக்கிலுள்ள இராமர் கோயிலில் நுழைய, ஒரு கூட்டம் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு அம்பேத்கர் ஊர்வலமாக சென்றார். ஆனால், கோயில் வாசலில் மாவட்ட நீதிபதி, காவல்துறையின் உயர் அதிகாரி மற்றும் ஆதிக்க சாதியினரும் இணைந்து அம்பேத்கரையும், கூட்டத்தினரையும் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். ஊர்வலம் உள்ளே சென்றால் கலவரமாக மாறும் என்று நினைத்த அம்பேத்கர் மறுநாள் அறவழியில் கோயிலின் வாசலில் அமைதியாக உட்கார்ந்து கோயிலுக்குள் நுழைய அனுமதி கேட்டு போராடினார்கள். ஆனால், கடைசிவரை அவர்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதிக்காரர்களுடைய ஊரில் படித்துக்கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றினர்; தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் தெருக்களில் நடக்கக்கூடாது, கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது என்று தடைவிதித்தனர்.
பிராமண பெண்களுக்கும், சூத்திர ஆண்களுக்கும் பிறந்த குழந்தைகளை 'தவறான முறையில் பிறந்த குழந்தைகள்', 'சண்டாளர்கள்', 'தீண்டத்தகாதவர்கள்' என்று மனுநூல் கூறுகிறது. இன்று அவர்கள் 'தாழ்த்தப்பட்டவர்கள்', 'தலித்' என்று அழைக்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சமூக அநீதிகளால் ஆத்திரமடைந்த அம்பேத்கர் 1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி மனுநூலை தீயிட்டு பொசுக்கினார். 'சமூக நீதிகளைப் பொறுத்தவரை மனு தர்மத்தின் சட்டங்களை விடக் கேவலமான சட்டங்கள் எதுவுமில்லை" என்று இந்து மதத்தின் மனித விரோதத் தன்மையை அம்பேத்கர் தோலுரித்துக் காட்டினார்.
இந்துக்கள் மதத்தின் பெயரால் அம்பேத்கருக்கும் அம்மக்களுக்கும் இழைத்த கொடுமைகள் அம்பேத்கரின் மனதில் ஆறாத காயங்களை ஏற்படுத்தியிருந்தன.
ஒரே தாயின் பிள்ளைகளைப்போல சகோதரத்துவ பாசத்தோடு வாழவேண்டிய மக்களை கொடிய சாதி வெறியர்களாக மாற்றிய இந்து மதத்தின்மீது அம்பேத்கருக்கு கடும்வெறுப்பு உருவானது. அவருடைய வெறுப்பு நியாயமானதே. "என்னை மதிக்காத, என்னை நேசிக்காத, என்னை கீழ்சாதி என்று இழிவுபடுத்தும் மதத்தை நான் ஏன் பின்பற்றவேண்டும்?" என்ற கேள்வி அம்பேத்கருக்குள் எழுந்தது.
'இந்து மதத்துக்குள் இருந்துகொண்டே இந்துக்களுக்குள் சீர்திருத்தத்தை உருவாக்கலாம்" என்னும் காந்தியின் கருத்தை முழுமையாக நிராகரித்தார். "சாதிப் பாகுபாட்டுக் கொள்கையை மதத்தின் முக்கிய சட்டமாக கொண்ட இந்து மதத்தை சீர்திருத்துவது இந்துக்களுக்கு சாத்தியம் இல்லை. மாறாக அம்மதத்தைவிட்டு நீங்குவதுதான் நம் இழிநிலை நீங்க சுலபமான வழி" என்று தீர்மானித்தார்.
இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த வெள்ளைக்காரன் இந்தியர்களை சாதி அடிப்படையில் பாகுபடுத்தவில்லை. சாதி வெறிபிடித்த இந்தியர்கள்தான் தாழ்த்தப்பட்ட இந்தியர்களை கொடுமைப்படுத்தினர்.
இந்துத்துவ சாதிக்கொடுமைகளை அனுபவித்த அம்பேத்கர் ஒருமுறை காந்தியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, "நாய்களையும், பூனைகளையும்விட மோசமாக இந்த நாட்டின் குடிமக்களாகிய நாங்கள் இழிவுபடுத்தப்பட்டு, குடிப்பதற்குத் தண்ணீர் கூடக் கிடைக்காமல் வாழ்கிறோம். இந்த கேவலமான நிலையில், இந்த நாட்டை என் சொந்தத் தாயகம் என்றும், இந்து மதத்தை என் சொந்த மதம் என்றும் எப்படி நான் கூறமுடியும்? சுயமரியாதையுள்ள தீண்டப்படாதவன் எவனும் இந்த நாட்டைக் குறித்து பெருமையும் பெருமிதமும் கொள்ள முடியாது. இந்த நாடு எங்களுக்கு இழைத்துவரும் இடுக்கண்களும், கொடுமைகளும் எண்ணில் அடங்காதவை, எனவே நான் இந்திய நாட்டைச் சார்ந்தவன் என்பதில் வெட்கப்படுகிறேன்" என்று வேதனையோடு சொன்னார்.
"சாதிதான் சமூகமென்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்று அம்பேத்கர் விரக்தியில் சொல்லியிருக்கிறார்.
"ஓர் இந்து தன் மனைவியை இழக்கத் தயாராகலாம்; ஆனால், தன் சாதியை இழக்க தயாராகமாட்டார்" என்று அம்பேத்கர் தீர்க்கமாக கூறினார். இந்துத்துவ சாதிய ஏற்றத்தாழ்வு கொடுமைகளின் விளைவால் கடுமையாக பாதிக்கப்பட்ட அம்பேத்கர், "நான் இந்துவாக பிறந்துவிட்டேன்; அது எனது சக்திக்கு அப்பாற்பட்டது; ஆனால், நான் இந்துவாக இறக்கமாட்டேன்" என்று உறுதி பூண்டார்.
"ஒற்றுமையாக, ஒருதாய் பிள்ளைகளாக வாழவேண்டிய மக்களை 'மேல்சாதி' என்றும் 'கீழ்சாதி' என்றும் பிரித்ததே ஒரு கடவுளானால் அப்படிப்பட்ட கொடிய கடவுளை என் கடவுளாக ஏற்றுக்கொள்ள தன்மானமும், பகுத்தறிவுமுள்ள என் மனம் மறுக்கிறது" என்று விரக்தியோடு அவர் அறிவித்தார். இந்து மதத்தை விட்டு வெளியேறினால்தான் சாதியத்திலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற தன் நிலைப்பாட்டை அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரகடனம் செய்தார். இலட்சக்கணக்கான மக்கள் அம்பேத்கரின் முடிவை ஏற்றுக்கொண்டனர்.
*அம்பேத்கரும் கிறிஸ்தவமும்*
அம்பேத்கர் 24 ஆண்டுகள் 'மதமும் சமுதாய விடுதலையும்' என்னும் தலைப்பில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து, இந்துத்துவாவில் கிடைக்காத விடுதலையை பல மதங்களிலும் தேடினார்.
கடைசியாக, கிறிஸ்தவம் அன்பின் மார்க்கம்; இங்கு நிச்சயம் சமத்துவம் கிடைக்கும் என்று முயற்சி செய்து, பரிசுத்த பைபிளை வாசிக்க தொடங்கினார். அவர் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் மற்றும் திருத்தூதர் பணிகள் என்னும் பகுதிகளை வாசிக்கும்போது, 'இந்துத்துவா இந்த மண்ணில் விதைத்த சாதி என்ற நச்சுக்கு சரியான நச்சுமுறிவு மருந்து பைபிள்தான்" என்று நம்பி எல்லா மனிதரும் குறிப்பாக எல்லா இந்துக்களும் கிறிஸ்தவர்களாக மாறவேண்டுமென்று விரும்பினாராம். ஆனால், அவருடைய உறவினரில் கிறிஸ்தவராக மாறியிருந்த சிலரிடம் கிறிஸ்தவர்களுடைய பண்பாடுகளை பற்றி விசாரித்தபோது அவருடைய எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. அவர் கிறிஸ்தவ ஆன்மீக தலைவர்களோடு தொடர்புகொண்டு, பழகியபின்தான் கிறிஸ்தவ சபையிலும் தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினரால் புறக்கணிக்கப்பட்டதை அறிந்துகொண்டார். கிறிஸ்தவர்களுக்கும் பைபிளுடைய சாராம்சமாகிய அன்புக்கும் பெரிய சம்பந்தம் இல்லை என்று கண்டுபிடித்திருக்கிறார் அம்பேத்கர்.
அம்பேத்கர் இந்துத்துவத்தை புறக்கணித்து வேறு மதத்துக்கு மாறப் போவதாக செய்தி வெளியானவுடன் அப்போதைய (1945) சென்னை திருமண்டலத்தின் பேராயர் திரு VS அசரியா அவர்கள் மகாராஸ்ட்ராவுக்கு சென்று அம்பேத்கரை நேரில் சந்தித்து கிறிஸ்தவத்துக்கு வர அழைப்பு விடுத்தார். இந்துத்துவத்தில் இருக்கும் சாதிப் பாகுபாடுகள் அப்படியே கிறிஸ்தவத்திலும் இருப்பதை ஏற்கெனவே தெளிவாக கண்டுணர்ந்த அம்பேத்கர் கிறிஸ்தவத்துக்கு மாறுவதில் பயனில்லை என்று உறுதியாக முடிவெடுத்து திரு VS அசரியா கூறிய இரட்சிப்பின் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அம்பேத்கர் கேட்ட பல கேள்விக்கு பேராயரால் பதில் சொல்லமுடியவில்லை. இன்றுவரை அம்பேத்கரின் கேள்விக்கு எந்த பேராயர்களாலும் பதில் சொல்லமுடியவில்லை. அம்பேத்கர் தான் விரும்பிய அன்பை, சகோதரத்துவத்தை, சமூக விடுதலையை கிறிஸ்தவத்திலும் பெற்றுக் கொள்ளமுடியாது என மனதார முடிவுசெய்து, கடைசியாக, 1956-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி 6 லட்சம் தலித் இந்து மக்களை அழைத்துக்கொண்டு 'கடவுளே இல்லை' என்னும் கொள்கையுடைய பௌத்த மதத்தை தழுவினார். இதில் முழுக்க முழுக்க அம்பேத்கரை குறை சொல்லமுடியாது என்றே என் மனசாட்சி சொல்கிறது.
ஒருவர் தன் வீட்டில் உணவு இல்லாவிட்டால் உணவகத்தில் உண்ணப் போவார். அங்கும் உணவு இல்லாவிட்டால் வேறொரு உணவகத்துக்கு போவார். எங்குமே உணவு கிடைக்காவிட்டால் பட்டினிதான் கிடக்கவேண்டும். அல்லது உணவு அல்லாததையும் உணவாக உண்ணும் பரிதாபத்துக்குத் தள்ளப்படுவார். அதுபோல, அன்பு, சமத்துவம், சகோதரத்துவம் என்னும் உணவு எந்த கடவுள் கொள்கையிலும் கிடைக்காததால் அம்பேத்கர் இறுதியில் 'கடவுளே இல்லை' என்னும் தவறான முடிவுக்கு வந்திருக்கிறார்.
அம்பேத்கருடைய வழிகாட்டுதலின்படி 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் மாநிலத்தில், இந்துத்துவ சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையடைய 300 தலித் இந்துக்கள் பௌத்த மதத்தை தழுவியிருக்கிறார்கள். அவர்கள் தலைமுறைகளாக வருத்தப்பட்டு சுமந்த சாதி என்னும் பாரத்திலிருந்து இளைப்பாறுதலைத்தேடி கிறிஸ்தவத்துக்கு அல்லவா வந்திருக்கவேண்டும்!
_"வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; உங்களுக்கு நான் இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28)_ என்னும் வசனம் வருத்தப்பட்டு சாதி இழிவை சுமப்பவர்களுக்கு பொருந்தாதா?
_'கடவுள் இல்லை' என அறிவிலிகள் தம் உள்ளத்தில் சொல்லிக் கொள்கின்றனர் (திருப்பாடல்கள் 53:1)_ என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. ஆனால், அம்பேத்கர் "கடவுள் இல்லை" என்னும் தவறான முடிவுக்கு வந்ததற்கு காரணமாயிருந்த 'அறிவாளிகள்' யார் என்று நாம் சிந்திக்கவேண்டுமல்லவா!
கிறிஸ்துவை மீட்பராக ஏற்றுக்கொள்ளாத அம்பேத்கர் கிறிஸ்தவ சாதி உணர்வுடைய சுயநல 'போதகர்களை' போல சுயநலவாதியாக இருந்திருந்தால் அமெரிக்காவுக்குப் போனவர் அங்கேயே தங்கியிருப்பாரே! படிப்பில் எப்போதுமே முதல் மாணவராக திகழ்ந்த அம்பேத்கர் தன் மூளை அறிவைப் பயன்படுத்தி பல கோடி பணம் சம்பாதித்து அன்றைய உலக பணக்காரர்களின் வரிசையில் இருந்திருக்கலாமே! அவர் தனக்கென்று வாழ்ந்திருந்தால் சாதி வெறியர்களின் அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள் எதையும் அவர் சந்திக்காமல் சுகபோகமாக வாழ்ந்திருக்கலாமே!
_ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவார் (நீதிமொழிகள் 19:17), எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்; துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார் (திருப்பாடல்கள் 41:1)_ என்னும் பைபிள் நம்பிக்கையின் அடிப்படையில் அம்பேத்கர் சமுதாய பணி செய்தாரா? இல்லை. அவருக்குத்தான் கடவுளின்மீதோ, மறுமையின்மீதோ நம்பிக்கையே இல்லையே! கடவுள் நம்பிக்கையாளர்கள் கிட்டத்தட்ட எல்லாருமே சாதி உணர்வாளர்களாக இருக்கிறார்களே! அம்பேத்கர் தன் சுய லாபத்துக்காக அல்ல, ஒரு கூட்டம் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது *மனப்பூர்வமாக அன்புவைத்து* அவர்களுடைய வாழ்க்கையின் மேம்பாட்டுக்காகவே தன் ஆயுள் முழுவதையும் அர்ப்பணித்தார்.
இதனாலேயே, 2012 ஆம் ஆண்டில் *வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்-ஐ.பி.என் தொலைக் காட்சியும்* நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராக அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அம்பேத்கருடைய சுயநலமற்ற சமூகப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு 1990-ம் ஆண்டு 'பாரத் ரத்னா' விருது அளித்துள்ளது. அம்பேத்கர், தன் வாழ்க்கையில் உயரவேண்டும் என்று வாழாமல் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவே வாழ்ந்தார். இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் என்ன நோக்கத்தோடு வாழ்கிறோம்?
'கிறிஸ்தவத்துக்கு மாறினால் பட்டியலின மக்களுக்கென்று கொடுக்கப்படும் சிறப்பு இடஒதுக்கீடு கிடைக்காது; பௌத்தத்துக்கு மாறினால் கிடைக்கும் என்ற காரணத்தால்தான் அம்பேத்கர் தன் மக்களோடு பௌத்தத்தை தழுவினார்' என்று சாதி வக்கிர 'போதகர்கள்' சிலர் அம்பேத்கர்மீது அவதூறு பரப்புகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அம்பேத்கர் பௌத்தத்துக்கு மாறிய காலகட்டத்தில் பௌத்த மதத்துக்கு மாறிய 'தலித்துகளுக்கு' இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. மாறாக அம்பேத்கர் மறைந்து 34 ஆண்டுகளுக்குப்பின் 1990-ம் ஆண்டு மத்திய அரசாங்கம், பௌத்தத்துக்கு மாறிய மக்கள்மீது பாராட்டிய கருணையின் அடிப்படையில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை பௌத்த தலித்துகளுக்கும் கொடுக்கவேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது. அவர் சாதியின் பெயரைச்சொல்லி கிடைக்கும் சலுகைகளைவிட சமூக விடுதலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் என்பதை இதன்மூலம் தெளிவாக அறியலாம்.
ஓருமுறை, "அம்பேத்கர் 6 லட்சம் இந்துக்களோடு பௌத்தத்தை தழுவினாரே! அவர் அடைய விரும்பிய சமூக விடுதலைக்காக கிறிஸ்துவிடம் ஏன் வரவில்லை?" என்று ஒரு பாஸ்டரிடம் கேட்டபோது, "அம்பேத்கரும் 6 லட்சம் இந்துக்களும் பரலோகத்துக்கு வருவது கர்த்தருடைய சித்தம் இல்லை" என்று மெத்தனமாக சொல்லிவிட்டார். ஆனால், _எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார் (1திமொத்தேயு 2:4)_ என்று பைபிள் தெளிவுபடுத்துகிறது. இதனால்தான், சாதி உணர்வுடைய ஒரு கிறிஸ்தவ போதகரைவிட சாதி மறுப்புக்கொள்கையுடைய ஒரு நாத்திகருக்கு நான் அதிக மரியாதை கொடுக்கிறேன்.
அன்று 6 லட்சம் இந்துக்களையும் அம்பேத்கரையும் கிறிஸ்தவ சாதி வெறியர்கள் இரக்கமின்றி புறக்கணித்துவிட்டார்கள். இன்று அதே மகாராஷ்ட்ராவுக்கு 'மிஷனரிகளை' அனுப்பி, "ஒரு ஆத்துமாவையாவது தாரும் ஆண்டவரே! என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள் கிறிஸ்தவ தலைவர்கள். ஆனால், கிறிஸ்தவர்களின் சாதி உணர்வால்தான் கிறிஸ்தவம் அசிங்கமாக புறக்கணிக்கப்படுகிறது என்று மிஷனரி இயக்க தலைவர்களே இன்னும் புரிந்துகொள்ளவில்லை. இதுதான் இன்றைய யதார்த்த கிறிஸ்தவம்.
சாதிவெறி உடைய ஒரு பிராமணன் கிறிஸ்தவத்தை வெறுத்தால் அதை புரிந்துகொள்ளலாம். ஆனால், பிராமணர்களால் ஒடுக்கப்பட்டு, உரிமை மறுக்கப்பட்டு, வன்கொடுமைகள் அனுபவித்து, காயப்பட்ட தலித் மக்களாலேயே கிறிஸ்தவத்தை விரும்பமுடியவில்லையே! இதற்கு காரணமான கிறிஸ்தவ சாதிவெறியை சாதாரணமாக விடமுடியுமா? சிந்தித்துப்பாருங்கள் மக்களே!
அம்பேத்கர் ஏங்கிய சமுதாய விடுதலைக்காக, சகோதரத்துவ வாழ்வியலுக்காக, _"விடுதலை நாயகன் வெற்றியை தருகிறார்"_ என்று நம்மால் புகழப்படும் இயேசுவிடம் அல்லவா அவர் வந்திருக்கவேண்டும்?
_"ஆண்டவருடைய ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் 'சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர்' என முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பி யுள்ளார் (லூக்கா 4:18,19)_ என்று அல்லவா இயேசு கூறுகிறார்! _ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்ப இயேசு கிறிஸ்து வந்தார்"_ என்று தெளிவாக இறைவேதம் கூறுகிறதே! இதைப்பற்றி யார் பேசுகிறோம்?
இம்மையில் பயனற்ற ஒரு ஆன்மீகம் மறுமையில் பயனுள்ளதாக இருக்கும் என்று மக்களால் எப்படி நம்பமுடியும்?
இவ்வுலகில் வாழும் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதிவெறியிலிருந்து அவர்களை இரட்சிக்கமுடியாத ஒரு இயேசு அவர்களை பரலோகத்துக்கு கொண்டுபோவார் என்று சொன்னால் பிறர் எப்படி நம்புவார்கள்?
அம்பேத்கர் இயேசு கிறிஸ்துவின் இலவச இரட்சிப்பை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? இரட்சிப்பு என ஒன்றே இங்கு இல்லை என்று அவர் தீர்மானித்துவிட்டார் என நினைக்கிறேன். அவர் இந்துத்துவம் என்ற ஒரு சாதிச் சிறைச்சாலையிலிருந்து கிறிஸ்தவம் என்ற வேறொரு சாதிச் சிறைச்சாலைக்கு போகவேண்டாம் என்று தீர்மானித்திருக்கலாம்.
"ஒருவர் கிறிஸ்தவராக மாறியபின் அவருக்கு சாதி இல்லை என்று இயேசுவின் போதனைகளை படித்த நாத்திகர்களே எதிர்பார்க்கிறார்கள்" என்று தோழர் சுப.வீரபாண்டியன் என்னும் நாத்திகர் தனது காணொளி களில் தெளிவுபடுத்துகிறார். ஆனால், அதை கிறிஸ்தவ அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கும் போது மனம் வலிக்கிறது. மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்னும் வேடிக்கையான கொள்கையை நம்பும் நாத்திக நண்பர்களிடம் இருக்கும் மனிதநேயத்தில் கொஞ்சம்கூட கிறிஸ்துவின் அன்பைப் பற்றி தொண்டை கிழியக் கத்தும் பக்திமான்களிடம் இல்லையே! செத்துப்போன பெரியாரும், அம்பேத்கரும் சாதித்ததைகூட உயிரோடிருக்கும் இயேசுவால் சாதிக்க முடியவில்லையே என்று நாத்திகர்கள் அசிங்கமாக கிறிஸ்தவத்தை கேலி செய்கிறார்கள். _"ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்"_ என்று பாட்டு பாடுகிறோம். ஆனால், இயேசு ஜீவிப்பதால் இந்த மண்ணுக்கு என்ன லாபம் என்று பிறர் கேட்கிறார்களே! இது உணர்வுள்ள என்னைப் போன்றோருக்கு மனவேதனையைக் கூட்டுகிறதே!
சாதியை ஒழிப்பது கிறிஸ்தவத்தால் சாதிக்கப்பட்டி ருக்குமானால், ஈ.வெ. இராமசாமி என்பவர் 'கடவுள் இல்லை' என்னும் கொள்கையை பிரகடனப்படுத்தியிருக்கமாட்டார். அவருக்குப் பின்னால் லட்சக்கணக்கான சிந்தனையாளர்கள் போயிருக்கமாட்டார்கள். பெரியாரின் பெயரால் அற்புதம் நடந்ததாலா இவ்வளவுபேரும் அவருக்குபின் சென்றார்கள்? அவருக்குத்தான் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டு என்ற நம்பிக்கையே இல்லையே!
சாதிவெறிக் கிறிஸ்தவர்கள் மீதுள்ள வெறுப்பில் பெரியார் கூறியதை கவனமாக படியுங்கள்.
_"கிறிஸ்தவமும் இந்துத்துவாவைப்போல வேறொரு பார்ப்பனிய மதமாகத்தான் இருக்கிறது. கிறிஸ்தவர்களில் பறையர் கிறிஸ்தவர், சக்கிலியர் கிறிஸ்தவர், வேளாளர் கிறிஸ்தவர், உடையார் கிறிஸ்தவர், நாயுடு கிறிஸ்தவர், நாடார் கிறிஸ்தவர், பிராமணர் கிறிஸ்தவர் என்ற பாகுபாடுகளும், குடியிருப்பு வசதி வித்தியாசங்களும், கோயிலில் அமர்வதில் இடஒதுக்கீடுகளும் இதை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. பாதிரியார்களும் சமத்துவத்தை வரவிடமாட்டார்கள். எப்படியாகிலும் எல்லாரையும் மதமாற்றம் செய்துவிடவேண்டும் என்னும் அந்தரங்க இலட்சியம் மட்டுமே கிறிஸ்தவர்களிடம் மிஞ்சி இருக்கிறது. எனவே, இந்துமதம் அழியவேண்டும் என்று நான் விரும்புவதுபோல் கிறிஸ்தவமும் அழியவேண்டும் என்றே விரும்புகிறேன்"_ என்று கூறினார் பெரியார்.
கடவுள் கொள்கையாளர்கள் சாதி, மத, இன வெறியுடைய சுயநலவாதிகளாக இருப்பதால்தான் ஜெர்மனி நாட்டு சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் என்பவர் _"கடவுளே இல்லை"_ என்று கூறினார்.
சில சாதிவெறி கிறிஸ்தவர்கள்" என்னிடம், _"நீங்கள் சாதியால் பாதிக்கப்பட்டு சாதிமறுப்பு கொள்கையை கூறுகிறீர்களா? நீங்கள்தான் SC இல்லையே! பின் ஏன் தாழ்த்தப்பட்டவர்களுக்ககாக வக்காலத்து வாங்குகிறீர்கள்?"_ என்று கேட்கின்றனர். அப்போதுதான் கிறிஸ்தவர்களின் மனப்பான்மை எவ்வளவு தரம்தாழ்ந்து போயிற்று என்று திரும்பவும் கண்டுபிடித்தேன். எனக்குத்தான் சாதிக் கொள்கையின் மீதே நம்பிக்கை இல்லையே! அப்படியிருக்க நான் எப்படி ஒரு சாதியை சார்ந்தவனாக இருக்கமுடியும்? தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாரும் சாதிமறுப்பு கொள்கை உடையவர்களா? அல்லது சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் சாதி ஒழியவேண்டுமென ஆசைப்படுகிறார்களா? அல்லது சாதியால் பாதிக்கப்படாதவர்கள் எல்லாரும் சாதி உணர்வாளர்களா? ஈ.வெ.ரா.பெரியார் சாதியால் பாதிக்கப்பட்டதாலா சாதியத்தை எதிர்த்தார்? விபத்தில் சிக்கி சாலையில் கிடக்கும் ஒருவரை வேறொருவர் தூக்கி காப்பாற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? விபத்துக்கு உள்ளானவரே அவரை காப்பாற்றிக்கொள்ளட்டும் என்று கூறிக்கொண்டு சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பாதிக்கப்பட்டவன் என் சொந்தக்காரனாக இருந்தால்தான் நான் உதவி செய்யவேண்டுமா என்ன?"
சாதியத்தை அழியாமல் பாதுகாக்கவேண்டும் என்னும் எண்ணம் உடைய ஒருவர் பெரியாரிடம், _"ஐயா, சாதி என்பது நமது சனாதன தர்மம் கூறும் சம்பிரதாயம். இதை நாம் எப்படி வெறுக்கமுடியும்?_ என்றார். உடனே பெரியார், _"அப்படியானால் அந்த சம்பிரதாயங்களையும் நான் வெறுக்கிறேன்"_ என்றார். உடனே மற்றவர், _"ஐயா சாஸ்திர சம்பிரதாயங்கள் கடவுளால் நமக்கு அருளப்பட்டிருக்கிறது"_ என்றார். உடனே பெரியார், _"அப்படியானால் அந்த கடவுளையும் நான் வெறுக்கிறேன்"_ என்றாராம். ஆக, மக்கள் நலனுக்காகத்தான் பெரியார் கடவுள் கொள்கையையே மறுத்திருக்கிறார். அவருடைய இடத்தில் நான் இருந்திருந்தால்கூட அப்படித்தான் சொல்லியிருப்பேன்.
கிறிஸ்தவர்கள் கொஞ்சமாவது பெரியார், அம்பேத்கர், காந்தி போன்றவர்களை அன்று புரிந்துகொண்டிருப்பார் களானால், 'திராவிடர் கழகம்' என்னும் நாத்திக இயக்கம் உருவாகி, பல்லாயிரக்கணக்கான பகுத்தறிவாளர்கள் 'கடவுளே இல்லை' என்னும் வேதனையான முடிவுக்கு வந்திருக்கமாட்டார்கள். கிறிஸ்தவம் சாதி என்னும் சாத்தானிய தந்திரத்துக்குள் விழாமல் இருந்திருக்கு மானால், திருமாவளவன் என்பவர், "சாதி ஒழியவும் வேண்டும்; சாதி அடிப்படையில் இடஒதுக்கீடும் வேண்டும்; சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை" என்னும் சூளுரையோடு 'விடுதலை சிறுத்தைகள்' என்னும் கட்சியை தொடங்கியிருக்கமாட்டார். ஒருமுறை ஒரு தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளிக்கும்போது, "இந்துத்துவ சாதியத்திலிருந்து விடுதலை அடைய விரும்பி மதம் மாறும் எவரும் கிறிஸ்தவத்தை தேர்வுசெய்யமாட்டார்கள் என்று கூறினார்.
கிறிஸ்தவம் ஒரு சாதியில்லாத சமூகமாக இருந்தால் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த திரைப்பட இயக்குநர் சைமன் செபாஸ்டின் என்ற சீமான் என்பவர், 'கடவுள் இல்லை' என்னும் கொள்கையைத் தழுவி, 'நாம் தமிழர்' என்னும் ஒரு கட்சியைத் தொடங்கியிருக்கமாட்டார். மாறாக, அவர் தேடிய சமுதாய விடுதலையை இயேசு கொடுக்கிறார் என்று உலகம் முழுக்க பரப்பும் நற்செய்தி அறிவிப்பாளராக மாறியிருப்பார். மக்கள் ஏங்கும் சமூக சமத்துவம் கிறிஸ்தவர்களுக்குள் இருக்குமானால் அம்பேத்கரிஸ்டுகள், பெரியாரிஸ்டுகள் என்ற சமூக நலம் விரும்பும் சிந்னையாளர்கள் எல்லாரும் இயேசுவின் இறைத்தூதர்களாக மாறியிருப்பார்கள். கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் சாதி பாகுபாடுகளாலேயே நாத்திகம் படுவேகமாக வளர்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
_"நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது" (மத்தேயு 5:13)_ என்று இயேசு பெருமான் தனது மலைப்பொழிவில் பேசினார். இவ்வுலகில் வாழும் மக்களின் வாழ்வுக்கு சுவையூட்டும் உப்பாக, மனித வாழ்க்கையை ஒரு புனிதமான லட்சியத்தோடு எப்படி வாழவேண்டும் என்று பிறருக்கு கற்பிக்க அழைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள், சாரமற்ற உப்பாக புறக்கணிக்கப்பட்டு கிடக்கிறார்கள். ஆக, கிறிஸ்தவத்துக்கு வரவேண்டும் என்று விரும்பிய பல்லாயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வதற்கு சாதிவெறி கிறிஸ்தவர்கள் தடையாக இருக்கிறார்கள். உலக மக்களுக்கு அன்பு என்றால் என்ன என்று சொல்லிக்கொடுத்து வழிகாட்டி, பிரகாசிக்கும் சுடர்களாக ஒளிவீசவேண்டிய கிறிஸ்தவர்கள் வேடிக்கைப் பொருளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.

Comments
Post a Comment