எனது கேள்விக்கு எனது பதில்கள்:
எனது கேள்விக்கு எனது பதில்கள்: -------------------- முதலில் கிறித்தவ – இசுலாம் மதங்களில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பது இல்லை. இது அம்மதக் கோட்பாடுகளிலும் சரி, புனித நூல்களிலும் சரி தெளிவாக இருக்கிறது. தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ அனைவரும் வழிபாடு செய்யலாம். சாதிக்கேற்ற பிரிவுகளோ, தனி ஆலயங்களோ கிடையாது. அனைவரும் சேர்ந்து உண்ணும் வழக்கமும் உண்டு. எவரும் ஒரு பாதிரியாராகவோ, கன்னியாஸ்தீரியாகவோ, மௌல்வியாகவோ உருவாக முடியும். இவை அனைத்தும் பார்ப்பனியத்தில் கிடையாது. அது பிறப்பு முதல் இறப்பு வரை பாகுபாடு பார்க்கும் ஒரு வாழ்க்கை முறை.
எனவே இந்தியாவில் கிறித்தவ, முசுலீம் மதங்கள் அறிமுகமான போது பெருவாரியான ஒடுக்கப்பட்ட மக்கள் அம்மதங்களுக்கு மாறினர். காலப்போக்கில்தான் இம்மதங்களிலும் சாதிப்பாகுபாடு பார்ப்பனியத்தின் செல்வாக்கினால் நுழைந்தது. இன்றும் முசுலீம் மதத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவு. கிறித்த மதத்தில் கொஞ்சம் அதிகம். சொல்லப்போனால் சாதிய ஏற்றத்தாழ்வை ஏற்றுக் கொண்டதாலேயே கிறித்தவ மதம் கொஞ்சம் வேகமாக பரவியது.
அதே நேரம் இன்றும் கிறித்தவ, முசுலீம் மதங்களில் பாதிரியார்களோ, மௌல்விகளோ அனைத்து பிரிவுகளிலிருந்தும் வருகிறார்கள். வந்த பிறகு கிறித்தவ சபையில் சாதிரீதியான அரசியலைச் செய்கிறார்கள். வட இந்திய முசுலீம்களிடத்தில் சாதிய ஏற்றத்தாழ்வு உண்டு. இருப்பினும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களையும் மனிதர்களாக கண்ட காரணத்தினாலேயே இம்மதங்களிற்கு மாறியது உண்மை. எனவே இதில் முரண்பாடு ஏதுமில்லை. அல்லது காலம் செல்லச் செல்ல இரு மதங்களும் பார்ப்பனியத்திற்கேற்ற முறையில் தம்மை தகவமைத்துக் கொண்டன. எனினும் அம்மதக்கோட்பாடுகளில் மக்களை ஏற்றத்தாழ்வோடு பாராட்டும் விதிகள் இல்லை என்பதால் இன்று வரையிலும் அம்மதங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் மாறுவது சகஜமாக இருக்கிறது.
பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன அன்புடன்: அய்யங்காளி, சென்னை.

Comments
Post a Comment