சாதியம் இந்துத்துவ கொள்கை
*சாதியம் இந்துத்துவ கொள்கை*
_"சாதியம் இந்தியாவை அழிப்பதற்குமுன் சாதியத்தை அழித்துவிடுங்கள்"_ என்று எழுத்தாளர் *K.R. வெங்கடாசலம்* எழுதுகிறார். அவர் சொல்வதுபோல சாதியம் இந்திய நாட்டையே அழிக்கும் அளவுக்கு ஆபத்தானதா இல்லையா என்று ஒவ்வொரு இந்தியனும் திறந்த மனதோடு ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
சாதியம் என்னும் சமூகவிரோதக் கொள்கை கோடிக்கணக்கானோரின் உயிரைக் குடித்த ஒரு கொடிய தத்துவம் என்பது இந்திய சமூக வரலாற்றை படிக்கும் எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் தெரியும். முதன்முதலில் யாரால் அந்த கொள்கை உருவாக்கப்பட்டது என்னும் முக்கியமான கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு சாதியத்தை கடைபிடிப்போரை மட்டும் குற்றம் சாட்டுவதிலும் அர்த்தம் இல்லை.
சாதியம் யாரால் உருவாக்கப்பட்டது என்பதை அறிய மனிதன் தோன்றிய வரலாற்றை ஆராயவேண்டும். இவ்வுலகில் மனிதன் தோன்றியது எப்படி என்பதைப் பற்றி பலரும் பல கொள்கைகளை சொல்கிறார்கள். என் அறிவுக்குத் தெரிந்த இரண்டு கொள்கைகளை இங்கே குறிப்பிடுகிறேன். மூன்றாம் கொள்கையை பிறகு விளக்குகிறேன். அவற்றை ஆய்வுசெய்தால் சாதிக் கட்டமைப்பு கொள்கை எங்கிருந்து வந்தது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம்.
_"மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தான்"_ என்று நாத்திகர்கள் சொல்கிறார்கள். குரங்கின் மரபணுவுக்கும் (DNA) மனிதனுடைய மரபணுவுக்கும் (DNA) சில ஒருமைப்பாடுகள் இருப்பதால்தான் மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்களாம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் மனிதனிலிருந்து வேறு எந்த உயிரியும் வராதது ஏன்? என்னும் கேள்வி எழுகிறது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் குரங்கு எங்கிருந்து வந்தது? என்ற கேள்வியை கேட்கவேண்டி யிருக்கிறது. அந்த கேள்விக்கு, 'குரங்கு வேறோரு உயிரியிலிருந்து வந்தது' என்று பரிணாமக் கொள்கை யாளர்கள் பதில் சொல்கிறார்கள். அந்த உயிரி எங்கிருந்து வந்தது என்று கேட்டால், 'நெபுலோஸ்' என்னும் அணுவிலிருந்து வந்தது என்று கூறுகிறார்கள். நெபுலோஸ் எங்கிருந்து வந்தது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. இந்த கொள்கையைத் தான் நாத்திகர்கள் மனிதத் தோற்றக் கொள்கையாக நம்புகிறார்கள். ஆனால், ஒன்றுமில்லாமையிலிருந்து ஒன்றை உருவாக்குகின்ற ஆற்றல் படைத்த ஒரு சக்தியிலிருந்தே உலகமும், அதிலுள்ள அனைத்து உயிரினங்களும் உருவாகியிருக்க வேண்டும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன்.
இரண்டாவதாக, வர்ண (சாதி) அடிப்படையில் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான் என்று இந்துத்துவம் கூறுகிறது. பிரம்மாவின் உடலிலிருந்து 'பிராமணர்கள்', 'சத்திரியர்கள்', 'வைசியர்கள்', 'சூத்திரர்கள்' என்ற வருணத்தினரும், பிரம்மாவின் நிழலிலிருந்து தீண்டத்தகாதவர்கள், தலித்துகள், தாழ்த்தப்பட்டவர்கள் என்றெல்லாம் அழைக்கப்படும் 'பஞ்சமர்கள்' என்ற கூட்டத்தினரும் தோன்றினார்கள் என்று இந்துத்துவம் கூறுகிறது. ஆக, சாதியம் இந்துத்துவத்தால் உருவாக்கப்பட்டது என்று அறிகிறோம். பஞ்சமர்கள் பகவானுடைய உடலிலிருந்து தோன்றாதவர்களானதால் அவர்கள் இந்துக்களே அல்ல என்று சங்கராச்சாரியார் ஒருமுறை குறிப்பிட்டார்.
"பிராமண வர்ணத்திலேயே ஐயர், ஐயங்கார், ராவ் என்று பல ஜாதிகள் இருக்கின்றன. நாலாம் வர்ணம் (சூத்திரன்) ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன" என்று சந்திரசேகர சரஸ்வதி என்பவர் தெய்வத்தின் குரல் என்னும் புத்தகத்தின் இரண்டாவது பாகத்தில் எழுதியிருக்கிறார்.
பஞ்சமர்கள், 'அவர்ணர்கள்' (வர்ண அமைப்பை சாராதவர்கள்) என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், இதில் கொடுமை என்னவென்றால், அவர்களே பல பிரிவுகளாக பிரிந்து தமிழ்நாட்டில் 'அருந்ததியர்', 'பறையர்', 'பள்ளர்' என்று சாதி நம்பிக்கையாளர்களாக மாற்றிக்கொண்டனர். இவர்களில் ஒரு சாதிக்காரர் வேறொரு சாதிக்காரருக்கு பெண்கொடுப்பதும் இல்லை பெண் எடுப்பதும் இல்லை. இதில் மகாகொடுமை என்ன வென்றால் ஒரு சாதியிலேயே பல கிளைகள் உள்ளன. அதில் ஒரு கிளை சாதிக்காரர் வேறொரு கிளை சாதிக்காரரை திருமணம் செய்யமாட்டார். எடுத்துக்காட்டாக 'பறையர்' என்னும் சாதிக்குள் 18 கிளை சாதிகள் உள்ளன. அதில் 'சங்கு' பறையர் 'கொங்கு' பறையரை ஏற்றுக்கொள்ளமாட்டார். பள்ளர்களில் 'ஆத்தா' பள்ளர் 'அஞ்ஞா' பள்ளரை ஏற்றுக்கொள்ளமாட்டார்.
வருணாசிரமம் என்னும் சமூக விரோத சாதிப் பாகுபாட்டு; கொள்கையை உருவாக்கியது இந்துத்துவம் தான் என்பதையும், அதன் கோர முகத்தின் கொடுமையையும் பற்றி இந்த அத்தியாயத்தில் விரிவாக ஆராய்வோம். இந்துக்களின் 'புனித' புத்தகமாக போற்றப்படும் பகவத்கீதையில் கிருஷ்ணர், _"சதுர் வர்ணம் மயா சிருஸ்டம் குண கர்ம விபாகஷக" (பகவத்கீதை 4:13)_ என்று கூறுகிறார். அதன் அர்த்தம்: 'மக்களை நானே குணம் மற்றும் செயல்களின் அடிப்படையில் நான்கு வர்ணங்களாக பிரித்தே படைத்தேன்' என்பதாகும். *'மனுதர்மம்'* என்பது பகவத்கீதையைப் போல இந்துக்கள் மதித்து போற்றும் அவர்களுடைய மற்றொரு 'புனித' புத்தகமாகும்.
_பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியவர்கள் *'பிராமணர்கள்',* அவருடைய தோள்பட்டையிலிருந்து தோன்றியவர்கள் *'சத்திரியர்கள்',* அவருடைய தொடையிலிருந்து தோன்றியவர்கள் *'வைசியர்கள்',* அவருடைய பாதத்திலிருந்து தோன்றியவர்கள் *'சூத்திரர்கள்'* (மனுநூல் 1:87)_ என்று இந்துத்துவா கற்பிக்கிறது. இந்த சாதிப் படிமான அமைப்பு இந்துக்களும், பிற மதத்திலிருந்து இந்துத்துவாவுக்கு மாறுகிறவர்களும் பின்பற்றவேண்டும் என்று உருவாக்கப்பட்டது. இதில் பிராமணர்களுக்கு இதர சாதியினராகிய சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்கள் கீழ்சாதியினர் என்றும், சத்திரியர்களுக்கு வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்கள் கீழ்சாதியினர் என்றும், வைஷ்யர்களுக்கு சூத்திரர்கள் கீழ்சாதியினர் என்றும் வகுத்துள்ளார்கள். *பிறப்பின் அடிப்படையில்* மனிதனை 'கீழ்சாதி, உயர்சாதி' என்று பிரிக்கும் இந்த கொடிய கொள்கை நிச்சயமாக நிஜமான கடவுளாலோ, மனிதநேயமுடைய மனிதர்களாலோ உருவாக்கப்பட்டிருக்க முடியாது. பிறரை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யவேண்டும் என்னும் கொடுமைவாதிகள்தான் இந்த கொடிய கொள்கையை உருவாக்கியிருக்கவேண்டும். மனுதர்மத்தை வாசிக்கும்போதுதான் இந்துத்துவா சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவாக விளங்குகிறது.
மனுநூல் என்பது *மனு* என்னும் பிராமணரால் முதலில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. அதற்கு அவர் வைத்த பெயர் *மனுஸ்மிருதி.* இது 2685 செய்யுட்களாகவும், 12 அத்தியாயங்களாகவும், 3 பகுதிகளாகவும் அமைந்துள்ளது. இது இந்துக்களுடைய பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் அவர்கள் பின்பற்றவேண்டிய சடங்கு சம்பிரதாயங்கள், வாழ்வியல் விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும். இதை 1784-ம் ஆண்டு கொல்கத்தா உச்சநீதி மன்றத்தின் நீதியரசர் *சர் வில்லியம் ஜோன்ஸ்* என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். *திரிலோக சீதாராம்* என்பவர் அதை தமிழில் மொழிபெயர்த்தார். இது ஆங்கிலேயர்களின் காலனி அரசாங்கத்தால் இந்துக்களுக்கென்று உருவாக்கப்பட்ட இந்து சட்டம் (Hindu Law) உருவாவதற்கு உதவியாக இருந்திருக்கிறது.
*பிறப்பு அடிப்படையில் சாதி*
சாதி பிறப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை மனுநூல் விளக்கங்களின் மூலம் தெளிவாக அறியலாம்.
ஒவ்வொரு சாதிக்கும் குறிப்பிட்ட தொழில்கள் என்று நிர்ணயித்து, அவரவர் சாதிக்குரிய தொழில்களை மட்டுமே செய்யவேண்டும் என்று மனுநூல் வகையறுத்துள்ளது. இதை 'குலத்தொழில்முறை' என்கின்றனர். இதில் 'கீழ்சாதி' என்று அழைக்கப்படுவோர் தங்கள் குலத்தொழில் பிடிக்கவில்லை என்று அதைவிட்டு 'மேல்சாதி' என்று அழைக்கப்படுவோர் செய்யும் தொழிலை கற்கும் உரிமையை மனுநூல் அவர்களுக்கு கொடுக்கவில்லை. இந்துத்துவ வருணாசிரம கோட்பாட்டில் தனிமனித கருத்துரிமை, பேச்சுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை.
சத்திரியர்கள் மக்களை பாதுகாக்கும் வேலையை செய்யவேண்டும். வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் அதை செய்ய உரிமை இல்லை.
வைசியர்கள் வாணிபம் செய்தல், கால்நடைகளை மேய்த்தல், வட்டிக்கு கடன் கொடுத்தல், நிலத்தில் பயிரிடுதல் என்னும் வேலைகளை செய்யவேண்டும். சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் அதை செய்ய உரிமை இல்லை.
பிராமணர்கள் மட்டும்தான் ஆன்மீக பணிசெய்யவேண்டும். அவர்கள் மட்டும்தான் கல்வி கற்பிக்கும் வேலை செய்யமுடியும். பிறருக்கு அந்த தகுதி இருந்தாலும் அந்த வேலையை செய்யமுடியாது. வேதங்கள், மனுநூல், உபநிடதங்கள், பகவத்கீதை, இதிகாசங்கள் என்று எல்லா புத்தகங்களையும் சத்திரியர்களும், வைஷ்யர்களும் பிராமணர்களிடம் மனப்பாடமாக கற்றாலும் அதை பிறருக்கு கற்பிக்க அவர்களுக்கு உரிமை இல்லை.
_வேதம் கற்றுத்தரல் கடவுளால் பிராமணர்களுக்காக ஒதுக்கப்பட்டதாகும் (மனுநூல் 1:88)._
_சத்திரியர்களை வேதம் படிக்கும்படி கடவுள் பரிந்துரைத்துள்ளார் (மனுநூல் 1:89)._
_வைசியர்களும் வேதம் படிக்க கடவுள் பரிந்துரைத்துள்ளார் (மனுநூல் 1:90)._
ஆனால், தானாக வேதத்தைக் கற்பவர் நரகத்துக்கு போவாராம்.
_குருவின்றி வேதம் கற்பவர் வேதத்தைத் திருடிய தண்டனைக்கு உள்ளாகி, நரகத்தில் உழல்வர் (மனுநூல் 2:116)._
பெண்கள் வேதம் கற்கக்கூடாது என்ற கொடிய சட்டத்தை மனுநூல் போதிக்கிறது.
வேதபாடத்துக்கும் _பெண்களுக்கும் தொடர்பேதும் இல்லை (மனுநூல் 10:18)._
_பிராமணனுடைய தொழிலை சூத்திரன் செய்தாலும், சூத்திரன், பிராமண சாதியாக மாறமாட்டான். ஏனென்றால் அவனுக்குப் பிராமண சாதித் தொழிலில் அதிகாரம் இல்லை அல்லவா? சூத்திரன் தொழிலைப் பிராமணன் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால், அவன் ஈனத்தொழில் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா? (மனுநூல் 10:73)_
_பிராமணன் தன் குலத்தொழிலை செய்யமுடியாவிட்டால் சத்திரியனுக்குரிய தொழிலை செய்து பிழைத்துக்கொள்ளலாம். இதுதான் அவனுக்குரிய அடுத்த குலத்தொழில் ஆகும். பிராமணன் தன் குலத்தொழில், சத்திரியருக்குரிய தொழில், ஆகியவற்றைச் செய்ய முடியாவிட்டால், வைசியனுக்குரிய வாணிபம் செய்தும், உழுது பயிரிட்டும், கால்நடைகளை மேய்த்தும் வாழ்க்கையை நடத்தலாம் (மனுநூல் 10:81,82)._
*தண்டனைகள்*
மனுநூல் சட்டத்துக்குமுன் அனைவரும் சமமல்ல. ஒருவர் தவறு செய்தால் அவருடைய சாதியின் அடிப்படையில் தண்டனை கொடுக்கவேண்டும் என்று மனுநூல் கூறுகிறது.
_பிராமணனுக்கு அவதூறு இழைக்கும் சத்திரியனுக்கு 100 பணமும், அவ்வாறு தவறு இழைக்கும் வைஷ்யனுக்கு 150 அல்லது 200 பணமும், சூத்திரன் தவறு இழைத்தால் கசையடியும் விதிக்கவேண்டும் (மனுநூல் 8:267)_
*சூத்திரர்களின் இழிநிலை*
சூத்திரன் என்னும் பெயர் 7 விதமானவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடியவன்.
2. யுத்தத்தில் கைதியாக பிடிக்கப்பட்டவன்.
3. பிராமணனிடத்தில் பக்தியோடு தொண்டு செய்பவன்.
*4. விபச்சாரி மகன்*
5. விலைக்கு வாங்கப்பட்டவன்.
6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன்.
7. தலைமுறை தலைமுறையாக தொண்டு செய்பவன். (மனுநூல் 8:415).
சூத்திரர்கள் அவர்களுக்கு மேலிருக்கும் மூன்று பிரிவினருக்கும் தொண்டு ஊழியம் செய்யவேண்டும் என்று வருணாசிரமம் கூறுகிறது.
_சூத்திரனுக்கு கடவுள் கூறும் கடமை, அவன் மற்ற மூன்று வருணங்களுக்கும் தொண்டு செய்யவேண்டும் என்பதே (மனுநூல் 1:91)._
சூத்திரர்கள் எவ்வளவு அறிவாளிகளானாலும் தலைமுறை தலைமுறையாக சேவகத்தொழிலையே செய்யவேண்டுமேதவிர பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் செய்யும் வேலையை செய்யும் உரிமை அவர்களுக்கு இல்லை. அப்படி செய்தால் தண்டிக்கப்படுவர் என்றும் வருணாசிரமம் தெளிவாக பதிவு செய்கிறது என்பதை கீழே காண்க.
_சூத்திரன் தன் தொழிலைவிட்டு உயர்குலத்தவருடைய தொழிலைச் செய்தால் அவன் பொருள் முழுவதையும் பறித்துக் கொண்டு அரசன் அவனை நாட்டைவிட்டுத் துரத்திவிட வேண்டும் (மனுநூல் 9:96)._
_சூத்திரர்கள் முன்னிலையில் பிராமணர் வேதத்தைப் படித்துக் காட்டக்கூடாது (மனுநூல் 4:99)._
_சூத்திரன் மனப்பாடம் செய்யும் நோக்கத்துடன் வேதம் படிப்பதைக் கேட்டால், அவனது காதுகளில் காய்ச்சிய ஈயத்தையும், அரக்கையும் ஊற்றவேண்டும். அவன் வேதம் ஓதினால் ஓதிய நாக்கு துண்டிக்கப்படவேண்டும். வேதத்தில் முழு தேர்ச்சி அடைந்தால், அவனது உடல் துண்டு துண்டாக வெட்டி சிதைக்கப்படவேண்டும் (மனுநூல் 12:4)._
அதனால் தான் பிராமணர்கள் அல்லாதவர்கள் அர்ச்சகர் வேலையை செய்யக்கூடாது என்று பிராமணர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பிராமணர் அல்லாதவர்கள் வேதங்கள், வேதாந்தங்கள், இதிகாசங்கள் என்று எல்லா கிரந்தங்களையும், இந்துத்துவ ஆன்மீக நூல்களையும், மனப்பாடமாக படித்தாலும் 'கடவுளுக்கு' சேவை செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை.
சூத்திரன் கடவுளிடம் தவம் செய்து வேண்டக்கூடாது. அப்படி தவமிருந்த சம்புகனின் கதையை வால்மீகி அருளிய இராமாயணத்தில் உள்ளபடி எழுதுகிறேன்.
இராமன் இலங்கைப்போர் முடித்து மகுடாபிஷேகம் செய்து கொண்டு அரசாட்சி புரிந்துகொண்டிருந்தான். அரசவையில் மந்திரிகளோடு அவர் ஆலோசனை செய்து கொண்டிருந்த வேளையில் அரண்மனை வாயிலில் ஒரு ஏழை பிராமணர் தன் கையில் ஒரு பாலகனின் உடலை ஏந்தியபடி கண்ணீருடன் நிற்கிறார் என அறிந்து அவரை உள்ளே அழைக்கிறார் ராமன். வயது முதிர்ந்த அந்த ஏழைப் பிராமணரைப் பார்த்து, _"நீர் யார்? என்ன நடந்தது?"_ என்று இராமன் கேட்க அந்த பிராமணர் கூறினார், _"ஸ்ரீ ராமா! இதோ இந்த பாலகன் என் மகன்; வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தவன்; திடுக்கென விழுந்து இறந்து விட்டான். ஒரு பிராமணக் குழந்தை இவ்வாறு சாகிறதென்றால் அந்த தேசத்தின் ஆட்சியில் தர்மம் அழியுமாறு ஏதோ நடக்கிறது என்று அர்த்தம். எனவே, என் மகனுடைய மரணத்திற்கு நீயே பொறுப்பு"_ என்று கூறி தன் மகனின் சடலத்தை அரசவையில் ராமன் முன் கிடத்தினார் அந்த பிராமணர்.
மனம் கலங்கிப் போன ராமன், _"என் ஆட்சியில் தர்மம் அழிகிறதா? அப்படி என்ன நடந்தது?"_ என்று தேவலோக ஞானிகளை அழைத்து கேட்கிறார். சபைக்கு வந்திருந்த திரிலோக சஞ்சாரியான நாரதர் ஒரு ஆலோசனை கூறினார்: _"ராமா உன் ஆட்சியில் நீ தர்மத்தை நல்லபடி காத்து வருகிறாய்; அப்படி இருந்தும் இந்த பிராமணப் பிள்ளைக்கு அகால மரணம் ஏற்பட்டுள்ளதென்றால் சனாதன தர்மத்தை மீறி ஏதோ செயல் நடந்திருக்கலாம்"_ என்றார். மேலும் இராமன் விளக்கம் கேட்க நாரதர், _"சூத்திரர்கள் யாரேனும் வேதம் வாசித்தல், தவம் இவற்றில் ஈடுபட்டிருக்கலாம். சூத்திரர்கள் வேதம் கற்பதும், தவம் செய்வதும் கலியுகத்தில்தான் நடக்கும். இந்த யுகத்தில் நடக்காது. அவ்வாறு நடந்தால் அது தர்மத்திற்கு எதிரானது. அதைத் தேடி தடுத்து நிறுத்தினால் இந்த பிராமணப் பிள்ளை பிழைக்கும்"_ என்றார். உடனே தன் வில், அம்பு, வாள் சகிதம் புறப்பட்ட இராமன் தான் திரும்பி வரும்வரை அந்த சிறுவனின் சடலம் கெட்டுவிடாமல் மருந்துத் தைலங்களை பெரிய பாத்திரத்தில் நிறைத்து அதில் அந்த உடலைப் பாதுகாத்து வரும்படி ஆணையிட்டான்.
கோபத்துடன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி பல திசைகளையும் பார்த்துக் கொண்டு வந்த இராமன் சரயு நதிக் கரையில் ஒருவர் தலைகீழாக நின்று உக்கிர தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டு புஷ்பக விமானத்தை இறக்கி, அவரிடம் சென்று, _"தவசிரேஷ்டரே, நீர் யார்? எதற்காக இந்த தவம் செய்கிறீர்கள்?"_ என்று கேட்க தவநிலையில் இருந்தபடியே அந்த தவசி சொல்கிறார்: _"என் பெயர் சம்புகன். நான் சொர்க்கத்திற்கு செல்வதற்காக இந்த உக்கிர தவம் புரிகிறேன்; நீங்கள் யார்?_ என்று கேட்கிறார் சம்புகன். _"நான் ஸ்ரீ ராமச்சந்திரன். இத்தவம் செய்யும் நீர் எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர்? பிராமணரா, ஷத்திரியரா, வைசியரா அல்லது சூத்திரரா சொல்லுங்கள்"_ என்று கேட்க, சம்புகன் கூறினார், _"ஸ்ரீ ராமச்சந்திர பிரபு! நான் உம்மைக் கண்டது என் பேறு. நான் சூத்திர யோனியில் பிறந்தவன்"_ என்றார் சம்புகன். அதைக் கேட்டவுடன் ஒரு நொடியும் தாமதிக்காது இராமன், "அப்படியானால் நான் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று கூறியபடி தன் பளபளக்கும் வாளை உருவி சம்புகனின் தலையை சீவினார். சம்புகனின் தலை வேறு உடல் வேறாக விழுந்தவுடன் வானுலகில் இருந்து தேவர்கள் மகிழ்ந்து பூமாரி பெய்தனர். அதே நேரத்தில் தைலக் கொப்பறையில் வைக்கப்பட்டிருந்த பிராமண சிறுவனின் சடலம் உயிர் பெற்று அச்சிறுவன் எழுந்தோடி வந்தான். அவனைக் கண்ட அந்த பிராமணர் மகிழ்ந்து இராமனை வாழ்த்தினார். இதுதான் இந்துத்துவ சனாதன தர்மத்தின் புனிதமான சிறப்பு.
_பன்றி முகர்தலாலும், கோழிச் சிறகின் காற்றினாலும், நாயின் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலினாலும் உணவு அசுத்தமாகின்றது (மனுநூல் 3:241)._
_சூத்திரன், பிராமணர்களைத் திட்டினால் அவன் நாக்கை அறுக்கவேண்டும் (மனுநூல் 8:270)._
_சூத்திரன் பிராமணன் பெயர், சாதி இவைகளைச் சொல்லித் திட்டினால் அவன் வாயில் பத்து அங்குல நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை நுழைக்க வேண்டும் (மனுநூல் 8:271)._
_சூத்திரன் பிராமணனைப் பார்த்து, "நீர் இதைச் செய்ய வேண்டும் என்று உபதேசம் செய்தால் அவன் வாயிலும், காதிலும் எண்ணெய்யைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் (மனுநூல் 8:272)._
_சூத்திரன் பிராமணனுடன் சம ஆசனத்தில் உட்கார்ந்தால், சூத்திரனுடைய இடுப்பில் சூடுபோடவேண்டும்; அல்லது அவனை ஊரைவிட்டுத் துரத்தவேண்டும்;; அல்லது அவனது ஆசனத்தில் ஒரு வெட்டுப்புண் ஏற்படுத்தவேண்டும் (மனுநூல் 8:281)._
இந்த சட்டப்படிதான், சங்கராச்சாரியை சந்திக்கச் சென்ற மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் APJ அப்துல் கலாம் போன்றவர்களை தரையில் உட்காரவைத்து பேசியிருக்கிறார் சங்கராச்சாரியார். அர்ஜுன் சம்பத் விஜயேந்திரரை சந்தித்தபோது அவரை நிற்கவைத்து பேசியிருக்கிறார் விஜயேந்திரர். அதற்கு காரணம் இவர்கள் சூத்திரர்களாம். ஆனால், சுப்பிரமணிய சாமி, எச் ராஜா போன்ற அரசியல்வாதிகள் சங்கராச்சாரியாரை சந்திக்க போனபோது அவர்களை சரிசமமாக நாற்காலியில் அமரவைத்து பேசியிருக்கிறார். ஏனெனில், இவர்கள் பார்ப்பனராம். வருணாசிரமத்தின் கோரமுகத்தை நாம் நுட்பமாக புரிந்துகொள்ளவேண்டும்.
_பிராமணனுடைய தலைமுடி, தாடி, மீசை, கால், கழுத்து, விதை இவைகளைப் பிடித்து இழுத்த சூத்திரனின் கைகளை யோசிக்காமல் வெட்டவேண்டும் (மனுநூல் 8:283)._
_சூத்திரன் பிராமணனை எந்த அங்கத்தினால் தாக்கினானோ அல்லது புண்படுத்தினானோ அந்த அங்கத்தை துண்டிக்கவேண்டும் (மனுநூல் 8:279)._
_சூத்திரன் வருணாசிரமப்படி நடக்காவிட்டால், பிராமணர்கள் ஆயுதமேந்தி அவர்களை தாக்கவேண்டும் (மனுநூல் 8:348)._
வருணாசிரமப்படி ஒவ்வொரு சாதிக்காரனும் அந்தந்த சாதிக்குள்தான் திருமணம் செய்யவேண்டும்; அதற்கு *'அகமணமுறை'* என்று பெயர். இந்துக்களுக்கு பிறசாதியினரை திருமணம் செய்யும் உரிமை இல்லை. பிறசாதிக்காரனை திருமணம் செய்தால் அதற்கு *'புறமணமுறை'* என்று பெயர். புறமணமுறையில் திருமணம் செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும்; அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் சமூகத்தில் புறக்கணிக்கப்படும்.
_உயர்குலத்துப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் சூத்திரனுக்கு கசையடி கொடுக்கவேண்டும் (மனுநூல் 8:366)._
_சூத்திரன் மனைவி சூத்திரச்சியாகவே இருக்க வேண்டும் (மனுநூல் 3:13)._
'ஒரு நாடார் ஒரு நாடாரைத்தான் திருமணம் செய்யவேண்டும்; அவர் ஒரு பிராமணரைத் திருமணம் செய்ய உரிமை இல்லை' என்னும் இன்றைய இந்த நிலைக்கு மூலகாரணம் வருணாசிரமம்தான் என்று இதன்மூலம் அறிகிறோம்.
_சூத்திரன் பிராமணனை கையினாலும் தடியினாலும், அடித்தால், அடித்த கையையும், காலால் உதைத்தால் உதைத்த காலையும் வெட்டிவிடவேண்டும் (மனுநூல் 9:280)._
_சூத்திரன் பிராமண சாதிக்குறியான பூணூல் முதலியவற்றை அணிந்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிடவேண்டும் (மனுநூல் 9:224)._
_சூத்திரன் பிராமணர் பொருளை அபகரித்தால், சூத்திரனை சித்ரவதை செய்து கொல்லவேண்டும் (மனுநூல் 9:248)._
_சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானாகிய பிராமணனுக்கு சேரவேண்டுமே தவிர சம்பாதித்தவனுக்கு சேராது (மனுநூல் 9:416)._
_பிராமணன் சாப்பிட்டு மீந்த எச்சில் உணவு, உடுத்தி கிழிந்த ஆடை, சாரமற்ற தானியம் இவைகளை பிராமணன் சூத்திரனுக்கு வாழ்வாதாரமாக கொடுக்கவேண்டும் (மனுநூல் 10:125)._
_சூத்திரன் கட்டாயம் பிராமணர்களுக்கு தொண்டூழியம் செய்யவேண்டும் (மனுநூல் 10:122)._
_சூத்திரன் தன்னால் பொருள் திரட்ட முடியும்போதும் அவ்வாறு திரட்டி செல்வம் சேர்க்கக்கூடாது. ஏனெனில், செல்வந்தனான சூத்திரன் பிராமணனுக்கு துன்பம் தருகிறான் (மனுநூல் 10:129)._
_செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங்காமலும், கேளாமலும், பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம் (மனுநூல் 11:13)._
*பிராமணர்களின் உயர்நிலை*
_பிராமணன் பிரஜாபதியின் முகத்திலிருந்து தோன்றியதாலும், முதலாவதாக தோன்றியதாலும், வேதங்களைப் பெற்றிருப்பதாலும் படைப்புக்கெல்லாம் தலைவனாகும் உரிமை உடையவன் (மனுநூல் 1:93)._
_படைப்புப் பொருட்களில் உயிருடையவை சிறந்தவை; உயிருள்ளவற்றுள் அறிவுள்ளவை சிறந்தவை; அறிவுள்ளவற்றில் மனிதன் சிறந்தவன்; மனிதருள் பிராமணர் சிறந்தவர் (மனுநூல் 1:96)._
_பிராமணனைக் காப்பாற்றும்பொருட்டு பிராமணன் அல்லாதவரை கொல்வது பாவம் அல்ல (மனுநூல் 8:143)._
_அரசன் பூமியிலிருந்து புதையல் கண்டெடுத்தால், அதில் பாதியை பிராமணர்களுக்கு தானம் செய்து மீதியை அரசு கருவூலத்தில் சேர்க்கவேண்டும் (மனுநூல் 8:38)._
_பிராமணன் எத்தகைய கொடிய பாவம் செய்தாலும் அவனைக் கொல்லக்கூடாது; அவன் தலையை மொட்டை அடிப்பதே மரண தண்டனையாகும். பிறருக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும் (மனுநூல் 8:379)._
_எத்தகைய பாவம் செய்தாலும், பிராமணனை கொல்லாமலும், அவன் பொருளைக் கவர்ந்துகொள்ளா மலும் ஊரைவிட்டு துரத்தவேண்டும் (மனுநூல் 8:380)._
_பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரிய ஒரு பாவம் இல்லை. எனவே, பிராமணனைக் கொல்வதுபற்றி அரசு நினைக்கவேகூடாது (மனுநூல் 8:381)._
_அறிவாளியாக இருந்தாலும் மூடனாக இருந்தாலும் பிராமணனே மேலான தெய்வம் (மனுநூல் 9:317)._
_ஒளியுள்ள தீ மயானத்தில் பிணத்தை எரித்தாலும், நிந்தனை இல்லாமல் எப்படி வேள்வியில் வளர்க்கப்படுகிறதோ அப்படியே பிராமணன் கெட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் வணங்கத்தக்கவன் ; மேலானவன் (மனுநூல் 9:318)._
_பிறப்பினால் உயர்ந்த இடத்திலிருந்து தோன்றியதாலும், உயர்ந்த குலத்தாலும், வேதங்களை பிழையறக் கற்றுணர்ந்த அறிவினாலும், பூணூல் அணிந்துள்ள சிறப்பினாலும் பிராமணன் அனைத்து வருணத்தாருக்கும் தலைவனாக உள்ளான் (மனுநூல் 10:3)._
_சூத்திரனுக்கு 'பிராமணப் பணிவிடை' ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணன் இல்லாத இடத்தில் சத்திரியனுக்கோ, சத்திரியன் இல்லாவிட்டால் வைசியனுக்கோ தொண்டு செய்யவேண்டும். அதிகமான பசுக்களையும், செல்வங்களையும் வைத்திருக்கும் சூத்திரனிடம் பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால் களவு செய்தாவது அல்லது பலாத்காரம் செய்தாவது பிராமணன் எடுத்துக்கொள்ளலாம் (மனுநூல் 11:12)._
_திருடிய பிராமணனை தண்டிக்கக்கூடாது (மனுநூல் 11:20)._
_பெண்களையும் சூத்திரரையும் கொல்வது மிகவும் சிறிய பாவமாகும் (மனுநூல் 11:66)._
_ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்யவேண்டிய பிராயச்சித்தம் எதுவோ அதைத்தான் சூத்திரனைக் கொன்றால் செய்யவேண்டும் (மனுநூல் 11:131)._
*இந்துத்துவாவை விட்டு வெளியேறாமல் சாதியை விட்டு வெளியேற முடியாது*
கடவுள்தான் மனிதனை சாதிவாரியாக பிரித்து படைத்தார் என்று இந்துத்துவாவின் மத புத்தகங்கள் சொல்வதால் சாதியில்லா சமூகத்தை இந்துவாக இருந்துகொண்டே சாதிக்கமுடியாது. அப்படியே ஒரு இந்துத்துவ நம்பிக்கையாளர் சாதியத்துக்கு எதிராக செயலாற்றினால் இந்துத்துவாவுக்கு எதிராக அவர் துரோகம் செய்கிறார் என்று அர்த்தம். இந்நிலையில் பிராமணருடைய சாதிவெறியால் பாதிக்கப்பட்ட சூத்திரரும், சூத்திரருடைய சாதிவெறியால் அதிகமாக பாதிக்கப்பட்ட பஞ்சமரும் இந்துத்துவ கொள்கைப்படி கடுத்த பகையோடு வாழ்கிறார்கள். ஏற்றத்தாழ்வு என்னும் சாக்கடையில் சொறிந்துகொண்டே அடிமைகளாக சுகமாக வாழக் கற்றுக்கொண்டார்கள். இந்துத்துவ கொள்கைகள் இந்துக்களுக்கே தீங்கானவை என்பது இன்றைய இந்துக்களில் பலருக்கும் தெரியாது. _"இந்துத்துவாவின் அஸ்திபாரமே சாதியம்தான். சாதி படிமானங்கள் அழிந்துவிட்டால் இந்துத்துவாவே அழிந்துவிடும்"_ என்று சங்கராச்சாரியார் கூறியிருக்கிறார். எனவே, இந்துமதம் அழிந்துவிடும் என்னும் தன்மான பிரச்சனையால்தான் இந்த சாத்தானிய சாதியத்தை இந்துக்கள் இறுகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
RSS (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க்) இயக்கத்தினர் தங்கள் வேதபுத்தகம் என்று கூறிக்கொள்வது அவர்கள் தலைவர் *கோல்வால்கர்* எழுதிய *'Bunch of Thoughts'* எனும் புத்தகம். இதை அவர்களால் மறுக்க முடியாது. மறுப்பவர்கள் சுளுளு-ல் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அந்த புத்தகத்தில் அவர்கள் கனவு காணக்கூடிய இந்து ராஷ்டிரத்தின் இலக்கணம் என்ன தெரியுமா? இதோ படியுங்கள்.
தென்னாட்டில் ஓர் ஆங்கிலேய அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக *'நாயுடு'* வகுப்பைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அந்த ஆங்கிலேய அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு *'பிராமணர்'.* ஒருநாள் அந்த ஆங்கிலேய அதிகாரி தனது 'பிராமண' பியூன் தன்னை பின்தொடர வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த 'நாயுடு' சாதிக்காரர் வந்தபோது, ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்து அவர் கைகுலுக்கினார். ஆனால், 'பிராமண' பியூனைப் பார்த்தவுடன் காலைத்தொட்டு வணங்கினார். அதைப்பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி, _"நான் பெரிய அதிகாரி, என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால், என்னுடைய பியூனின் காலைத் தொட்டு கும்பிடுகிறாயே! ஏன் இப்படி?"_ என்று கேட்டார். அதற்கு அந்த உதவியாளர், _"நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாக இருக்கலாம். ஆனால், நீங்கள் ஒரு மிலேச்சர் (இழிகுலத்தவர்); அவர் ஒரு பியூனாக இருந்தாலும் நாங்கள் கடவுளுக்கு சமமாக வணங்கக் கூடிய 'பிராமண' சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழவேண்டியது எனது கடமை"_ என்று பதில் சொன்னார். இதுதான் இந்து தர்மம். (கோல்வால்கர் எழுதிய 'Bunch of Thoughts' நூல் பக்கம் 138-139). கல்வியறிவில் குறைந்தவராக இருந்தாலும், தன்னைவிட குறைவான பொறுப்பில் பணிசெய்பவராக இருந்தாலும் பரவாயில்லை. 'பிராமணன்' என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் வணங்குவதற்கான தகுதியுடையவர் என்கிறார் கோல்வால்கர். அது மட்டுமல்லாமல் அதுதான் இந்து தர்மம் என்கிறார்.
பிராமணர்கள் கடவுளுக்கு சமமாக வணங்கத் தக்கவர்கள் என்பதை கீழ்காணும் ரிக்வேத வசனத்தின் மூலம் இந்துக்கள் அறிவுறுத்தப்பட்டுகிறார்கள்.
_தெய்வாதீனம் ஜகத் சர்வம்; மந்த்ராதீனம் துதெய்வதம்; தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்; தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத் (ரிக் வேதம் 62:10)._
இந்த சமஸ்கிருத சுலோகத்தின் அர்த்தம்: "இந்த உலகம் தெய்வத்துக்குக் கட்டுப்பட்டது. தெய்வங்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவை. மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழவேண்டும்".
அவனவன் தலைவிதிப்படி அவனவன் வாழ்கிறான்; அவனுடைய கர்மவினையை யாரும் மாற்றமுடியாது. பூர்வ ஜென்மத்தில் இவன் செய்த பாவத்தால்தான் இந்த ஜென்மத்தில் சண்டாளனாக பிறந்திருக்கிறான் என்னும் இந்துத்துவ கொள்கையை நாம் பின்பற்றுவதுவரை சக மனிதனை சகோதரனைப்போல நேசிக்கமுடியாது. ஆக இந்துத்துவத்தை ஒருவர் பின்பற்றுவது வரை அவர் சாதியில் இருந்து விடுதலை அடைய முடியாது.

Comments
Post a Comment