கிறிஸ்தவத்தின் அடிப்படை
*கத்தோலிக்கர்களை* _சிலை வழிபாட்டினர்_ என்று *CSI* சபையினர் புறக்கணித்துவிட்டார்கள். CSI சபையின் _ஞானஸ்நானம் சரி இல்லை_ என்று *பாப்திஸ்துகள்* சொல்கிறார்கள். பாப்திஸ்து சபையை _அனல் இல்லாத பாரம்பரிய சபை_ என்று *AG* சபையினர் சொல்லிவிட்டார்கள். AG சபையின் பாஸ்டர் மீசை வைத்திருப்பதாலும், அவர் திருமணம் செய்திருப்பதாலும் அதை ஒரு _ஆவிக்குரிய சபையாகவே_ *TPM* மக்கள் கணக்கில் எடுக்கமாட்டார்கள். TPM மக்கள் வேறு யாரிடமும் _சிரிக்ககூடமாட்டார்கள்._ *அதுதான் பரிசுத்தம்* என்று ஏகமனதாக முடிவெடுத்து விட்டார்கள். இவர்கள் ஒருவரையும் *யேகோவாவின் சாட்சிகள்* _கிறிஸ்தவர்கள்_ என்றே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
_"நாங்கள்தான் சரியாக நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறோம்”_ என்கிறார்கள் *இயேசு நாமக்காரர்கள்.* இவர்கள் அனைவரையும் பார்த்து _"நாங்கள்தான் சரியான நாளில் கடவுளை ஆராதிக்கிறோம்"_ என்று *ஏழாம் நாள்காரர்கள்* சொல்கிறார்கள். _"விசுவாசிகள் செய்த குற்றங்களை பாஸ்டரிடம் அறிக்கையிடாவிட்டால் நரகத்துக்கு போவார்கள்"_ என்று *புதிய எருசலேம்"* சபையினர் அறிக்கை விடுகிறார்கள். இவர்கள் _ஒருவருடைய ”சபை பெயரும்” சரி இல்லை_ என்று *கிறிஸ்துவின் சபையார்"* Tension ஆக வாழ்த்துகிறார்கள். _இவர்கள் ஒருவருடைய உபதேசமும் சரி இல்லை_ என்று *"மார்மன்கள்"* அறிவித்துவிட்டார்கள்.
*தான் சொல்வதுதான் சரி; பிறர் சொல்வதெல்லாம் தவறு* என்று எல்லாரும் நினைக்கிறார்கள். இதனால்தான் யாரும் யாரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதில் *ஒரு ஜாதிக்காரர்கள் வேறொரு ஜாதிக்காரர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.* இந்த துர்நாற்றம் வேறு!
கிறிஸ்தவம் இந்த மண்ணில் வந்து 2000 ஆண்டுகளாகியும் கிறிஸ்தவ மக்கள்தொகை 2.3%. ஆனால், கிறிஸ்தவம் இந்தியாவுக்கு வந்து 650 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இஸ்லாமிய மக்கள்தொகை 19%. இதற்கு காரணம் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கும் *பிரிவினைகளும் பாகுபாடுகளுமே* என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவில்லை.
இப்படி கிறிஸ்தவர்கள் யாரும் யாரையும் ஏற்றுக்கொள்ளாமல், மிருகங்களைப்போல கடித்து குதறுவதை பார்க்கும் மற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கடுப்பாகி *"கடவுளே இல்லை"* என்னும் முடிவுக்கு வந்துவிட்டார்கள். இப்படித்தான் நாத்திகம் வேகமாக வளர்கிறது.
அன்பைப்பற்றி பேசும் நாம் இப்படி *_"கேவலமாக சின்னாபின்னமாக பிரிந்து சீரழிந்து கிடப்பதை பிறர் இழிவாக பார்க்கிறார்களே, இயேசுவின் பெயர் அவமதிக்கப்படுகிறதே"_* என்று இந்த சபைகளின் *பிரிவினைவாத போதகர்களுக்கும் எந்த சுரணையும் இல்லை.* *இப்படி பிரிந்துகிடப்பதுதான் கர்த்தருடைய சித்தம் என்றும் நினைக்கிறார்கள்.* ஏனெனில் *இயேசுவுக்கு மகிமை சேர்ப்பது அல்ல;* தங்களுக்கு புகழ் சேர்ப்பது தான் அவர்களுடைய நோக்கம்.
கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழாவிட்டால் *“இயேசு மட்டும்தான் கடவுள்”* என்று பிறர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று இயேசுவே சொல்லிவிட்டார் (யோவான் 17:21-23).கடவுளின் இராஜ்ஜியத்தை கட்டுகிறோம் என்னும் தரிசனம் இருந்தால்தானே அந்த ஒற்றுமை ஏக்கம் வரும். இங்கு ஊழியர்கள் தங்கள் இராஜ்ஜியங்களை அல்லவா இயேசுவின் பெயரில் கட்டி எழுப்புகிறோம். ஞானஸ்நானத்தைப் பற்றி 4 மணி நேரம் வேதபாட வகுப்புகள் நடத்தும் போதகப் பிதாக்களுக்கு அன்பைப் பற்றி பேச 4 நிமிடம்கூட இல்லை. *அன்பு இருந்தால்தானே ஒற்றுமை வரும்.* பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
பெரோயா பட்டணத்தார் வேத ஆராய்ச்சி செய்தபோது அந்த ஆராய்ச்சி அவர்களை *நற்குணசாலிகளாக* மாற்றியது. நமது வேத அறிவும் ஆராய்ச்சியும் நம்மை நற்குணசாலிகளாக அல்லவா மாற்றியிருக்க வேண்டும். மாறாக, இவ்வளவு ஆண்டுகளாக பிரிவினைகளையும் கசப்பு வைராக்கியங்களையும்தானே உருவாக்கி இருக்கின்றன. பைபிளை எடுத்து *"ஆழமான சத்தியத்தை கூறப் போகிறேன்"* என்று யாராவது கூறினாலே *அடுத்த சபைப்பிரிவு உருவாகப்போகிறதோ* என்று பயமாக இருக்கிறது.
கிறிஸ்தவத்தின் அடிப்படை மூலக்கூறே அன்புதானே! நமக்காக தன் உயிரையே கொடுத்த அந்த பாசமுள்ள நெஞ்சம் எதற்காக ஏங்குகிறது என்பது தெரிந்தால்தானே அவருடைய நோக்கங்களுக்கென்று வாழமுடியும்!
விரக்தியோடு,
*ஒரு கிறிஸ்தவன்*

Comments
Post a Comment