சாதி மறுப்பு வாசகத்தை முகப்பு படமாக (DP) ஏன் வைக்கவேண்டும்?

*சாதி மறுப்பு வாசகத்தை முகப்பு படமாக (DP) ஏன் வைக்கவேண்டும்?*

அன்பு சகோதரமே,
*_"நான் எதற்காக சாதி மறுப்பு முகப்பு படம் (DP) வைக்கவேண்டும்"?_* என்று பல சாதி மறுப்பு சகோதரர்களே கேட்கிறார்கள். அதற்கான பதிலை ஆராய்வோம். இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை அடைந்த நாம் ஒவ்வொருவரும் அந்த இரட்சிப்பை பிறருக்கு அறிவிக்கவேண்டும் என்று கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார் (மத் 28:19).

அதற்கு கருவிகளாக, *தொலைக்காட்சி, வலையொளி(YOUTUBE), குறுந்தகடுகள்(CD), புத்தகங்கள், பத்திரிக்கைகள், துண்டுப்பிரதிகள் (Tracts), பலகைகள் (Boards)* என்று பலவற்றை பயன்படுத்துகிறோம். நமது ஆன்மீக நம்பிக்கையை நமது *முகநூல் (Facebook), வாட்சப்* போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பரப்புகிறோம். அதேபோல, *நமது சாதி மறுப்பு நிலைப்பாட்டை பிறருக்கு பிறருக்கு எளிதில் வெளிப்படுத்தி அவர்களையும் சாதி மறுப்பாளர்களாக மாற்ற* முகப்பு படங்களை (DP) ஒரு நல்ல கருவியாக பயன்படுத்தலாம். தற்போது 500 விசுவாசிகள் தங்கள் DP மூலம் இந்த எளிய ஊழியத்தை நம்மோடு இணைந்து செய்துகொண்டிருக்கிறார்கள். நீங்களும் உங்கள் முகப்பு படத்தில் ஒரு சாதி மறுப்பு வாசகத்தை வைக்கலாமே சகோ! நமக்காக உயிரை தந்த இயேசுவுக்காக இந்த சின்ன தியாகத்தை செய்வோமே சகோதரர்களே!

*உங்கள் புகைப்படத்தை மாற்ற விரும்பினால், உடனே எனக்கு அனுப்பவும்.*

இதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் என்னிடம் பேசலாம்.

*பாஸ்டர் சீனிவாசன்*
அகில இந்திய கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கம்
*9150403546*

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை