சாதி மறுப்பு இயக்கத்தின் நோக்கங்கள் யாவை?

*சாதி மறுப்பு இயக்கத்தின் நோக்கங்கள் யாவை?*

*சாதி மறுப்பு கருத்தரங்குகள்*
கிறிஸ்தவர்களுக்குள் புரையோடிக் கிடக்கும் சாதி வேறுபாடுகளாலும், அவற்றின் விளைவால் உருவான பாகுபாடுகளாலும் திருச்சபையின் வளர்ச்சி எவ்வளவு பாதிக்கப்படுகிறது என்பதை சாதி மறுப்பின் முக்கியத்துவம் தெரியாத சபை தலைவர்களுக்கும், விசுவாசிகளுக்கும் போதிக்கவேண்டும். அதன்மூலம் சாதி வேறுபாடுகளை திருச்சபையை விட்டு அகற்றவேண்டும்.  அந்த புரட்சிகரமான மாற்றத்தை சாதிக்க *வேதாகமம் சொல்லும் சாதி மறுப்பு போதனைகளை* சபைக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அதற்காக போதகர்களுக்கு பயிற்சி கொடுக்கவேண்டும். அதற்கு *சாதி மறுப்பு கருத்தரங்குகள்* நடத்தவேண்டும். இயக்கத்தின் வட்டார பொறுப்பாளர்கள் இதை முன்னின்று நடத்தவேண்டும்.

*சாதி மறுப்பு திருமணம்*
இயேசு கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல நாமும் சாதி உணர்வின்றி நம்மிடம் வரும் எல்லோரையும் திருமணத்திலும் ஏற்றுக்கொண்டால்தான் இறையரசு விரைவில் வளரும். சாதியை கடவுள் உருவாக்கவில்லை. அது சாத்தானால் உருவாக்கப்பட்டது. *சாதியம் என்பது சாத்தானியம்* என்பது நமது இயக்கத்தின் முக்கியமான முழக்கம். நிஜமான கடவுளுக்குமுன் மேல்சாதி என்றும் கீழ்சாதி என்றும் பிரிவினைகள் இருக்கமுடியாது. அப்படி பிரிவினைகளை கற்பிக்கும் இறைக்கொள்கை போலி ஆன்மீகம். இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டபின்பும் இந்துத்துவ சாதியத்தை பின்பற்றுதல் மிகப்பெரிய குற்றமாகும்.

*சாதி மறுப்பு பிரார்த்தனை*
இந்துத்துவ வருணாசிரம கொள்கையால் ஒடுக்கப்பட்டவர்களை சொந்த உடன்பிறப்புகள்போல கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வளரவேண்டும் என்று நாம் எல்லோரும் பிரார்த்தனை செய்யவேண்டும். வட்டாரவாரியாக பொறுப்பாளர்கள் இந்த பிரார்த்தனைகளை ஒழுங்கு செய்து நடத்தவேண்டும். அம்மாவட்ட உறுப்பினர்கள் அனைவரும் அதில் கலந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும். எல்லா சபையின் போதகர்களையும் இந்த பிரார்த்தனைகளில் பங்கெடுக்க அழைப்பு விடுக்கவேண்டும்.

சாதி உணர்வு உடைய கிறிஸ்தவர்கள் இந்த இயக்கத்தை அழிக்க சாத்தானோடு கைகோர்ப்பார்கள். சாதி மறுப்பு வாட்சப் குழுக்களிலும் அப்படிப்பட்ட சதிகாரர்கள் இருக்கலாம். மிகவும் கவனமாக, பிரார்த்தனையோடு அவர்களிடம் நடந்துகொள்ளவேண்டும்.

*சாதி மறுப்பு விளம்பரங்கள்*
சாதி மறுப்பு வாசகங்கள் பொறித்த *ஆடைகள், பலகைகள், சுவரொட்டிகள், கைப்பிரதிகள், புத்தகங்கள், காணொளிகள்* மூலம் சாதி மறுப்பு கொள்கை கிறிஸ்தவ மக்களிடையே விரைவில் பரப்பப்படவேண்டும்.

*சாதி மறுப்பு பேரணி*
 இயேசு அருளும் சமத்துவ கொள்கையை பிறருக்கு அறிமுகப்படுத்த காவல்துறையின் அனுமதி பெற்று *சாதி மறுப்பு பேரணிகள்* நடத்தவேண்டும். பேரணியில் பங்கெடுக்கும் மக்கள் *சாதி மறுப்பு வாசகங்கள் பொறித்த ஆடைகள்* அணிந்திருக்கவேண்டும். சாதி மறுப்பு வாசகங்கள் பொறித்த பதாகைகள் கையில் வைத்திருக்கவேண்டும். இயேசுவால் இந்திய நாட்டின் சாதி பிரச்சனைக்கு முடிவுகட்டமுடியும் என்று வேதாகமத்திலிருந்து  பிரசங்கிக்கவேண்டும். இயேசுவின் அருளால் சாதி உணர்விலிருந்து விடுதலை அடைந்தவர்கள் அதை சாட்சியமாக பொதுமக்களிடம் சொல்லவேண்டும். பள்ளி சான்றிதழில் சாதி குறிப்பிடத் தேவையில்லை என்று 1973-ம் ஆண்டில் வெளிவந்த அரசாணையை விளம்பரப்படுத்தவேண்டும்.


*இயக்க உறுப்பினர்களின் கடமைகள்*
சாதி மறுப்பு இயக்க உறுப்பினர்கள் எந்த சாதி சங்கங்களிலும் உறுப்பினராக இருக்கவோ, சந்தா கொடுக்கவோகூடாது.

சாதி மறுப்பு இயக்க உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது சாதி பெயரை சொல்லக்கூடாது. (சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்காகத்தான் அரசாங்கம் சாதி கேட்கிறது.)

சாதி மறுப்பு இயக்க உறுப்பினர்கள் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வாங்கக்கூடாது. ஏனெனில், சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதுவரை சாதி ஒழியாது.

சாதி மறுப்பு இயக்க உறுப்பினர்கள் சாதி அடிப்படையில் யாரையும் தரக்குறைவாக எழுதுவது, பேசுவது மட்டுமல்ல நினைப்பதே தவறு.

சாதி மறுப்பு இயக்க உறுப்பினர்கள் சாதி அடிப்படையில் யாருக்கும் எந்த உதவியும் செய்யக்கூடாது.

சாதி மறுப்பு இயக்க உறுப்பினர்கள் பெயருக்குப்பின் சாதிப் பெயரை சேர்க்கக்கூடாது.

சாதி மறுப்பு இயக்க உறுப்பினர்கள் சாதி பார்க்காமல் திருமணம் செய்யவேண்டும். சாதி மறுப்பு திருமணங்களுக்கு உதவியாக இருக்கவேண்டும்.

கிறிஸ்தவர்கள் அனைவரும் சாதி உணர்விலிருந்து விடுதலை அடையவேண்டுமென்று பிரார்த்தனை செய்யவேண்டும்.

இயக்க உறுப்பினர்கள் தங்களுக்கு தெரிந்த எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இயக்க கொள்கைகளை எடுத்துகூறி அவர்களையும் இயக்க உறுப்பினர்களாக இணைக்கவேண்டும்.

இயக்க விளம்பர பொருட்களை பிறருக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டும். வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் சாதி மறுப்பை பற்றி பேசவேண்டும்.

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை