ஒருவர் தன்னைவிட தாழ்ந்த சாதி என்று அழைக்கப்படுபவரை திருமணத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் என்ன?

ஒருவர் தன்னைவிட தாழ்ந்த சாதி என்று அழைக்கப்படுபவரை திருமணத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் என்ன?

மனிதன் இயல்பாகவே சுயமரியாதை உடையவன். கடவுள் மனிதனை அப்படித்தான் படைத்துள்ளார். தன்னைவிட உயர்ந்தவர் என்று யாரையாவது முன்மாதிரியாக வைத்துக்கொண்டு அவர்களுடைய உயரத்துக்கு வரவேண்டும் என்று வாழ்க்கை முழுவதும் நினைப்பவன். தன்னைவிட உயர்ந்தவர் என்று கருதப்படும் யாராவது, அவர்களுடைய உயரத்துக்கு இவனை உயர்த்தமாட்டார்களா என்று ஏங்குபவன். யாரும் தன்னை விமர்சனம் செய்வதையோ, குறை சொல்வதையோ விரும்பாதவன். பிறர் தன்னை புகழவேண்டும் என்று விரும்புகிறவன். வாழ்க்கையில் எந்த சிக்கல்களிலும் சிக்கிக்கொள்ள விரும்பாதவன். தன்னால் சமாளிக்கமுடியாத பிரச்சனைகளை சமாளிக்கமட்டும் கடவுளை பயன்படுத்துபவன்.
தன்மானத்தை பாதிக்கும் எந்த செயலிலும் அவன் ஈடுபடமாட்டான். உயர்கல்வி பயிலவேண்டும், உயர் பதவியில் அமரவேண்டும், பெருந்தொகையை சம்பாதிக்கவேண்டும், அழகான வசதியான வீடு கட்டவேண்டும், அழகான கார் வாங்கவேண்டும், யார் தன்னை பார்த்தாலும் ஏற்றுக்கொள்ளும் எடுப்பான தோற்றம் உடையவராக இருக்கவேண்டும் என்றெல்லாம் விரும்புகிறவன். பிறருக்கு உதவி செய்வதால் தனது சுயமரியாதை பாதிக்கப்படுமானால் அப்படிப்பட்ட உதவிகளை செய்யமறுப்பவன். பிறரை தன் அளவுக்கு உயர்த்தவேண்டும் என்ற நாட்டம் இல்லாதவன். தான் தவறு செய்தபின் அதை தவறு அல்ல என்று நியாயப்படுத்துபவன். பிறர் தவறு செய்யும்போது அதை தவறு என்று நிரூபிக்க முயல்பவன்.

தன்னைவிட கீழ்சாதி என்று கருதப்படுபவரை ஏற்றுக்கொள்ளாதவர். தன்னைவிட தாழ்ந்த சாதி என்று கருதப்படுபவரை திருமணம் செய்தால் தன்னையும் தாழ்ந்த சாதி என்று பிறர் இழிவுபடுத்திவிடுவார்களே என்று பயப்படும் குறுகிய மனப்பான்மை உடையவன். இதற்கு கிறிஸ்தவர்களும் விதிவிலக்கு அல்ல. இந்த சுயநல மனப்பான்மையிலிருந்து படைத்த கடவுளால் மனிதனை விடுவிக்கமுடியுமா? இவனால் எப்படி தன்னைவிட தாழ்ந்த சாதி என்று அறியப்படுபவரை திருமணம் செய்யமுடியும்? இயேசுவாலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணமுடியவில்லை என்று தீர்மானித்து பலர் இயேசுவை உலக இரட்சகர் அல்ல என்று முடிவுசெய்துவிட்டனர்.

Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை