அம்பேத்கர் இந்துத்துவத்தை புறக்கணித்து... பெளத்த மதத்தை தழுவினார்.
அம்பேத்கர் இந்துத்துவத்தை புறக்கணித்து வேறு மதத்துக்கு மாறப் போவதாக செய்தி வெளியானவுடன் அப்போதைய சென்னை திருமண்டலத்தின் பேராயர் *திரு வி எஸ் அசரியா அவர்கள்* அம்பேத்கரை நேரில் சந்தித்து கிறிஸ்தவத்துக்கு வர அழைப்பு விடுத்தார். அம்பேத்கர் சமூக சமத்துவத்தை பற்றிய கோரிக்கையை முன் வைத்தார். அதாவது, அவரோடிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை, சாதி பார்க்காமல் கிறிஸ்தவர்களால் திருமணம் செய்யமுடியுமா என்று கேட்டார். அந்த கேள்விக்கு பேராயரால் பதில் சொல்லமுடியவில்லை. இன்றுவரை அம்பேத்கரின் அந்த கேள்விக்கு எந்த பேராயர்களாலும் பதில் சொல்லமுடியவில்லை. அம்பேத்கர் தான் விரும்பிய அன்பை, சகோதரத்துவத்தை, சமூக விடுதலையை கிறிஸ்தவத்திலும் பெற்றுக்கொள்ளமுடியாது என்று மனதார முடிவுசெய்து, கடைசியாக, 1956-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி 6 லட்சம் தலித் இந்து மக்களை அழைத்துக்கொண்டு 'கடவுளே இல்லை' என்னும் கொள்கையுடைய பெளத்த மதத்தை தழுவினார்.
Comments
Post a Comment