வருத்தத்தால் அல்ல; ஆதங்கத்தால்...
*தாய் மதத்தைவிட்டு வெளியேறுவது பெற்ற தாயை கைவிடுவதற்கு சமம்* என்று பலர் தத்துவம் பேசுகிறார்கள்.
நான் கேட்கிறேன்: என்னைப் பெற்ற தாய் என்னைப் பார்த்து, *_"உன் அண்ணன் உன்னைவிட உயர்ந்த ஜாதி, உன் தம்பி உன்னைவிட கீழ்ஜாதி"_* என்று சொல்வாரா? *_"உன் தம்பி கல்வி கற்கக்கூடாது; மீறினால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று; கற்றதை ஓதினால் அவன் நாக்கை வெட்டு (மனுநூல் 12:4); அவன் உன்னோடு சம ஆசனத்தில் அமரக்கூடாது; அமர்ந்தால் ஊரைவிட்டு துரத்து" (மனுநூல் 8:281)_* என்று பாகுபாடு கற்பித்தால், *"அவர் உண்மையான தாயா இல்லையா?"* என்று எனக்கு சந்தேகம் வராதா? தத்தெடுத்த தாய்கூட இப்படி கொடுமைப்படுத்தமுடியாதே! இது நம் எல்லாருடைய மனசாட்சிக்கும் தெரிந்திருக்கும்போது, *களங்கமில்லாத அன்புக்கு சொந்தமான தாயை இந்த மிருகத்தனமான மதத்துக்கு எப்படி இணையாக்குகிறீர்கள்?* சக மனிதனிடம் காட்டவேண்டிய அடிப்படை நீதியே இல்லாத கொடிய மதத்தை என் *’தாய்மதம்’* என்று எப்படி சொல்லமுடியும்? இந்துத்துவம் தாய் போன்ற ஒரு மதமானால் அது இப்படி கொடுமைப்படுத்துமா?
*இந்து கடவுள்களை சாத்தான்* என்று ஒரு பாதிரியார் சொன்னாராம். அந்த பாதிரி எனக்கு *மாமனோ, மச்சானோ, பங்காளியோ* அல்ல. ஆனால், அவர் சொன்னது சரியா தவறா என்று நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களை *’கீழ்சாதி’, ’தீண்டத்தகாதவன், ‘சண்டாளன்’* என்று ஒரு மதம் இழிவுபடுத்தி, கொடுமைப்படுத்தி, கொலைகூட செய்யுமானால், அந்த கொடிய மதத்தை இயக்கிக்கொண்டிருக்கும் தீய சக்திகளை நீங்கள் *சாத்தான்* என்று சொல்லாமல் *பரமாத்மா* என்றா சொல்வீர்கள்?
ஒரு கொள்கை உங்களுக்கே படுபாதகம் இழைக்கும் *சமூகவிரோத கொள்கை* என்று தெரிந்தபின்பும் அதில் நீங்கள் தொடர்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றது அல்லவா! உங்களை *வேறொரு மதம்* இழிவுபடுத்தினால்கூட அதை சகித்துக்கொள்ளலாம். ஆனால், *உங்கள் மதமே* உங்களை இழிவுபடுத்தி கொடுமைப்படுத்தும்போது அந்த மதத்தில் *சுயமரியாதையோடு* எப்படி தொடர்கிறீர்கள்?
இந்து மதத்தின் எல்லா ‘புனித’ புத்தகங்களையும் நீங்கள் மனப்பாடமாக கற்றாலும் பரமாத்மாவுக்கு அர்ச்சக பணி செய்யும் உரிமை உங்களுக்கு இல்லை என்னும் மகாஇழிவை சகித்துக்கொண்டு இந்துவாக எப்படி தொடர்கிறீர்கள்? இந்த அநியாயமான சமுதாய ஏற்றத்தாழ்வு கொள்கையை அனைவருக்கும் பொதுவான *நிஜமான* சர்வேஷ்வரன் கற்பித்திருக்கமுடியுமா?
உயர்ந்த மரியாதைக்குரிய *டாக்டர் அம்பேத்கர்* என்னும் மக்கள் தலைவர் 1956 அக்டோபர் 14-ம் தேதி *6 லட்சம் இந்துக்களோடு* இந்துத்துவாவைவிட்டு வெளியேறியதை ஒரு சாதாரண நிகழ்வாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. இந்துக்களால் எவ்வளவு கொடுமை அனுபவித்திருந்தால் 6 லட்சம் பேர் ஒரே நாளில் இந்துத்துவாவை வெறுத்து புறக்கணித்திருப்பார்கள்! சாதிவெறி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு செய்த அநியாய கொடுமைகளை அனுபவித்த அம்பேத்கர் ஒருமுறை காந்தியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, _"நாய்களையும், பூனைகளையும்விட மோசமாக இந்த நாட்டின் குடிமக்களாகிய நாங்கள் இழிவுபடுத்தப்பட்டு, குடிப்பதற்குத் தண்ணீர் கூடக் கிடைக்காமல் வாழ்கிறோம். இந்த கேவலமான நிலையில், இந்த நாட்டை என் *’சொந்தத் தாயகம்’* என்றும், இந்து மதத்தை என் *’சொந்த மதம்’* என்றும் எப்படி நான் கூறமுடியும்? சுயமரியாதையுள்ள தலித் எவனும் இந்த நாட்டைக் குறித்து பெருமைகொள்ள முடியாது. இந்த நாடு எங்களுக்கு இழைத்துவரும் கொடுமைகள் எண்ணில் அடங்காதவை, எனவே நான் இந்திய நாட்டைச் சார்ந்தவன் என்பதில் வெட்கப்படுகிறேன்"_ என்று வேதனையோடு சொன்னார்.
*இந்து என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!* என்று டயலாக் பேசுகிறார்களே! இது உங்களுக்கு அநியாயமாக தெரியவில்லையா? உங்களை *’தீண்டத்தகாதவன்’* என்று ஒடுக்கும் சமூகத்தில் உங்களுக்கு என்ன தலைநிமிர்வு இருக்கிறது? நீங்கள் எவ்வளவுதான் "ஜெய் ஸ்ரீராம்" என்று கத்தினாலும் *"ஏ நானும் ரெளடிதான்!"* என்று வடிவேலு கத்துவதுபோலத்தான் இருக்கிறது. நீங்கள் விரும்பும் ஒரு ஆதிக்க சாதி பெண்ணை திருமணம் செய்யமுடியுமா? அப்படியே செய்தாலும் உங்களை கொன்றுவிடுவார்கள் என்பதே வரலாறு நமக்கு கற்றுத்தந்திருக்கும் கசப்பான பாடம்.
இந்துத்துவத்தைவிட்டு தலித் ஒருவர் வெளியேறும்போது ஆதிக்கசாதி இந்துக்கள் கொதித்து எழுவது *சகோதரன் பிரிந்து சென்றுவிட்டானே என்ற வருத்தத்தால் அல்ல; ஒரு அடிமை தப்பித்துவிட்டானே என்னும் ஆதங்கத்தால்தான்* என்பதை தயவுசெய்து உணருங்கள்.
*- அன்பே முக்கியம் இயக்கம்*

Comments
Post a Comment