You may never know what will be the end results of your castless church
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
"You may never know what will be the end results of your castless church campaign actions, But if you do nothing, there will be no results." - Tamilaram
"இந்து" என்ற வார்த்தையின் அர்த்தமும் தோற்றமும் இந்து என்ற சொல் மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை எவ்வாறு உருவானது என்பது பலருக்கு தெரியாது. இந்தியாவில், சில அரசியல்வாதிகள் இந்து மற்றும் இந்துத்துவா என்ற சொற்களை வகுப்புவாத மேலோட்டங்களுடன் சில சித்தாந்தத்தை அல்லது கட்சியை ஊக்குவிக்க அல்லது எதிர்க்க பயன்படுத்துகின்றனர். உலகின் பிற பகுதிகளுக்கு, இந்து மற்றும் இந்து மதம் என்பது திட்டவட்டமான மத அமைப்பைச் சேர்ந்த ஒரு தொகுப்பைக் குறிக்கிறது. உண்மை என்னவென்றால், "இந்து" மற்றும் "இந்தியா" ஆகிய இரண்டு வார்த்தைகளும் வெளிநாட்டு வம்சாவளியைக் கொண்டுள்ளன. "இந்து" என்ற சொல் ஒரு சமஸ்கிருத வார்த்தையோ அல்ல, இந்த வார்த்தை இந்தியாவின் எந்த சொந்த பேச்சுவழக்குகளிலும் மொழிகளிலும் காணப்படவில்லை. "இந்து" என்பது ஒரு மதச் சொல் அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பண்டைய வேத நூல்களில் "இந்து" என்ற வார்த்தையின் குறிப்பு எதுவும் இல்லை. சிந்து நதியை பெர்சியர்கள் சிந்து என்று குறிப்பிடுவதாகக் கூறப்படுகி...
*கத்தோலிக்கர்களை* _சிலை வழிபாட்டினர்_ என்று *CSI* சபையினர் புறக்கணித்துவிட்டார்கள். CSI சபையின் _ஞானஸ்நானம் சரி இல்லை_ என்று *பாப்திஸ்துகள்* சொல்கிறார்கள். பாப்திஸ்து சபையை _அனல் இல்லாத பாரம்பரிய சபை_ என்று *AG* சபையினர் சொல்லிவிட்டார்கள். AG சபையின் பாஸ்டர் மீசை வைத்திருப்பதாலும், அவர் திருமணம் செய்திருப்பதாலும் அதை ஒரு _ஆவிக்குரிய சபையாகவே_ *TPM* மக்கள் கணக்கில் எடுக்கமாட்டார்கள். TPM மக்கள் வேறு யாரிடமும் _சிரிக்ககூடமாட்டார்கள்._ *அதுதான் பரிசுத்தம்* என்று ஏகமனதாக முடிவெடுத்து விட்டார்கள். இவர்கள் ஒருவரையும் *யேகோவாவின் சாட்சிகள்* _கிறிஸ்தவர்கள்_ என்றே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். _"நாங்கள்தான் சரியாக நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறோம்”_ என்கிறார்கள் *இயேசு நாமக்காரர்கள்.* இவர்கள் அனைவரையும் பார்த்து _"நாங்கள்தான் சரியான நாளில் கடவுளை ஆராதிக்கிறோம்"_ என்று *ஏழாம் நாள்காரர்கள்* சொல்கிறார்கள். _"விசுவாசிகள் செய்த குற்றங்களை பாஸ்டரிடம் அறிக்கையிடாவிட்டால் நரகத்துக்கு போவார்கள்"_ என்று *புதிய எருசலேம்"* சபையினர் அறிக்கை விடுகிறார்கள். இவர்கள் _ஒருவருடைய ”சபை...
*சாதியம் இந்துத்துவ கொள்கை* _"சாதியம் இந்தியாவை அழிப்பதற்குமுன் சாதியத்தை அழித்துவிடுங்கள்"_ என்று எழுத்தாளர் *K.R. வெங்கடாசலம்* எழுதுகிறார். அவர் சொல்வதுபோல சாதியம் இந்திய நாட்டையே அழிக்கும் அளவுக்கு ஆபத்தானதா இல்லையா என்று ஒவ்வொரு இந்தியனும் திறந்த மனதோடு ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சாதியம் என்னும் சமூகவிரோதக் கொள்கை கோடிக்கணக்கானோரின் உயிரைக் குடித்த ஒரு கொடிய தத்துவம் என்பது இந்திய சமூக வரலாற்றை படிக்கும் எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் தெரியும். முதன்முதலில் யாரால் அந்த கொள்கை உருவாக்கப்பட்டது என்னும் முக்கியமான கேள்விக்கு விடை கண்டுபிடிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு சாதியத்தை கடைபிடிப்போரை மட்டும் குற்றம் சாட்டுவதிலும் அர்த்தம் இல்லை. சாதியம் யாரால் உருவாக்கப்பட்டது என்பதை அறிய மனிதன் தோன்றிய வரலாற்றை ஆராயவேண்டும். இவ்வுலகில் மனிதன் தோன்றியது எப்படி என்பதைப் பற்றி பலரும் பல கொள்கைகளை சொல்கிறார்கள். என் அறிவுக்குத் தெரிந்த இரண்டு கொள்கைகளை இங்கே குறிப்பிடுகிறேன். மூன்றாம் கொள்கையை பிறகு விளக்குகிறேன். அவற்றை ஆய்வுசெய்தால்...
Comments
Post a Comment