உங்கள் வாட்சப்பில் *About and Phone Number* என்ற இடத்தில் கீழ்க்காணும் ஏதாவது வாசகத்தை பதிவு செய்யலாமே சகோ!

உங்கள் வாட்சப்பில் *About and Phone Number* என்ற இடத்தில் கீழ்க்காணும் ஏதாவது வாசகத்தை பதிவு செய்யலாமே சகோ!
தன்னைத் தான் நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியாது.

ஒரு பெண்ணை இச்சையோடு பார்ப்பது அவரோடு விபச்சாரம் செய்வதற்கு சமமானால் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிப்பது அவரை கொலை செய்வதற்கு சமம்.

 கீழ்ஜாதி என பிறரை அவமதிப்பது பாவம் என விசுவாசிகளுக்கு போதிக்க ஒடுக்கப்பட்டவராக பிறக்கவேண்டும் என்றில்லை. ஒடுக்கப்பட்டோரை நேசித்தாலே போதும்.

மேல்ஜாதி என்று கர்வம் கொள்வது மட்டுமல்ல; கீழ்ஜாதி என்று ஒத்துக் கொள்வதும் பெரும் குற்றமாகும்.

ஒருவன் தன்னை கீழ்ஜாதி என்று ஒத்துக் கொள்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றது.

கிறிஸ்தவர்களின் பணிவான கவனத்திற்கு: வருத்தப்பட்டு சாதி இழிவு என்னும் பாரத்தை தலைமுறைகளாக சுமப்பவர்களுக்கு இயேசு இளைப்பாறுதல் தரமுடியுமா?

 தனக்கு லாபமாக இருக்கும் ஜாதி பெருமையை இயேசுவுக்காக குப்பை என தூக்கி எறிவதைவிட மேலான புகழ்ச்சி ஆதிக்க சாதிக்காரனுக்கு வேறு எதுவும் இல்லை.

கண்ணுக்கு தெரிந்த சகோதரனை கீழ்ஜாதி என வெறுத்துவிட்டு கண்ணுக்குத்தெரியாத கடவுளிடம் அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் என பாடுவதில் அர்த்தமில்லை

யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தீண்டத்தகாதவர் என்றோ சொல்லக்கூடாது. (அப். 10:28).

நீயே உன்னை கீழ்ஜாதி என்று ஒத்துக்கொண்டால் பிறர் உன்னை கீழ்ஜாதி என்று புறக்கணிப்பதை தவறு என்று நீயே எப்படி குற்றம் சாட்ட முடியும்?



Comments

Popular posts from this blog

சனாதன தர்மம்

கிறிஸ்தவத்தின் அடிப்படை

சாதியம் இந்துத்துவ கொள்கை